சினிமா செய்திகள்

முன்னாள் மனைவிக்கு முன் நின்று திருமணம் செய்து வைத்த ஸ்பைடர் மேன் நடிகர் - புகைப்படங்கள் வைரல்

விவாகரத்து கிடைத்த வெறும் 19 நாட்களில் திருமணம் நடந்துள்ளது.

ஸ்பைடர் மேன் நடிகர் டோபி மாகுயர் தனது முன்னாள் மனைவிக்குத் திருமணம் நடத்தி வைத்துள்ளார்.

எத்தனை புதிய நடிகர்கள் ஸ்பைடர் மேன் பாத்திரத்தில் நடித்தாலும் ஸ்பைடர் மேன் என்றாலே ஞாபகத்திற்கு வருவது நடிகர் டோபி மாகுயர் முகம்தான்.

2000களில் ஸ்பைடர் மேன் மூன்று பாகங்களில் நடித்து புகழ்பெற்ற டோபி மாகுயர்க்கு தற்போது 51 வயது. ஹாலிவுட்டில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வளம் வரும் டோபி செய்த செயல் ஒன்று ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

மனைவி

டோபி மாகுயர் 2003 ஆம் ஆண்டு ஜெனிபர் மேயர் என்பவரை மணந்தார். 2016 இல் இந்த தம்பதி பரஸ்பரம் பிரிந்தது. டோபி - ஜெனிபர் தம்பதிக்கு ரூபி ஸ்வீட்ஹார்ட் (19) என்ற மகளும், ஓடிஸ் டோபியாஸ் (17) என்ற மகனும் என இரு குழந்தைகள் உள்ளனர்.

டோபியும் ஜெனிபரும் பிரிந்த பின்னரும் பின்னரும் நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். மேலும், குழந்தைகளை இருவரும் இணைந்தே வளர்த்து வருகின்றனர்.

விவாகரத்து

10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வரும் இவர்கள் 6 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி இருவரும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்துப் பெற்று பிரிந்தனர்.

விவாகரத்து கிடைத்த வெறும் 19 நாட்களில், கடந்த அக்டோபர் 10 அன்று ஜெனிபருக்கும் இசை நிறுவன உரிமையாளரான பிரபல தொழிலதிபர் ஜெப் ஒகுன்லேசிக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணம்

இந்தத் திருமணத்தை முன்னாள் கணவர் டோபியே முன்னின்று நடத்தி வைத்துள்ளார். இந்த திருமண விழாவின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ஒரு புகைப்படத்தில் அவர் ஸ்பைடர் மேனின் செய்கையை நிகழ்த்தியது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

ஜெனிபர் மேயரும் ஜெப் ஒகுன்லேசியும் கடந்த சில மாதம் முன் பெண் குழந்தை பெற்ற நிலையில் ஹவாயில் உள்ள தனியார் ரெசார்ட் ஒன்றில் தற்போது அவர்கள் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த திருமண விழாவில் பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ, அவரது காதலி விட்டோரியா செரெட்டி, அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், கோர்ட்னி காக்ஸ், ராப் பாடகர் யங் தக் என பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT