சினிமா செய்திகள்

ரிவெஞ்ச், அரசியல், 'டார்க்' காமெடி - எதிர்பார்ப்பை எகிற செய்த சூது கவ்வும் 2 டிரெய்லர்

சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகியுள்ளது.இந்தப் படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ளார்.

நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான 'சூது கவ்வும்' திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகியுள்ளது.

'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களும்' என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் ராதாரவி, எம்.எஸ். பாஸ்கர், கருணாகரன், கராத்தே கார்த்தி, ரமேஷ் திலக், அருள்தாஸ், ஹரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி.குமார் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ளார்.

'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களும்' படம் வரும் 13-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

SCROLL FOR NEXT