சினிமா செய்திகள்

SK நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி முறைகேடு.. நடிகர் சிவகார்த்திகேயன் எச்சரிக்கை

வாட்​ஸ்​அப் செய்​தி​கள், மின்​னஞ்​சல்​கள், அழைப்​பு​கள் அல்லது சமூக வலைத்தளங்களை நம்ப வேண்டாம்.

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார்.

2018 ஆம் ஆண்டு 'சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ்' மூலம் பல திரைப்படங்கள் உருவாகியுள்ளன. ‘கனா’, ‘நெஞ்​ச​முண்டு நேர்​மை​யுண்டு ஓடு ராஜா’, ‘வாழ்’, ‘கொட்​டுக்​காளி’, ‘தாய்க்​கிழ​வி’ போன்ற படங்களை தயாரித்துள்ளார்.

இதனையடுத்து அம்மாமுத்து சூர்யா இயக்கத்தில் 'சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ்' தயாரிப்பில் புதிய படம் ஒன்று வெளியாக இருக்கிறது. இதற்கிடையே அவரது தயாரிப்பு நிறுவனத்தை பயன்படுத்தி அவரது பெயரிலையே சிலர் மோசடி செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக வாட்​ஸப் மெசேஜ்களை சமூக வலைத்தளத்தில் பகிர்த்துள்ள 'சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ்' அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் "எங்கள் நிறுவனத்தின் திரைப்படங்களுக்கான நடிகர்களை தேர்வு செய்யப்படுவது இயக்குநர்களோ, ஒருங்கிணைப்பாளர்களோ, காஸ்​டிங் ஏஜென்ட்களோ அல்லது வேறொரு நபர்களோ தேர்ந்தெடுப்பதில்லை.

எஸ்கே புரொடக் ஷன்ஸ் வெளியிடும் எந்த ஒரு அறிவிப்புகள் மற்றும் தகவல்கள் தங்களது அதிகாரபூர்வ சமூக வலைத்தளத்தில் மட்டும் தான் வெளி​யிடப்​படும். இது தொடர்பாக வாட்​ஸ்​அப் செய்​தி​கள், மின்​னஞ்​சல்​கள், அழைப்​பு​கள் அல்லது சமூக வலைத்தளங்களை நம்ப வேண்டாம்.

'சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ்' பெயரை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என நடிகர் சிவகார்த்திகேயன் அறிவித்திருக்கிறார்.