ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ஜன நாயகன்’. தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் தொடர்பான சிக்கல்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக தற்போது வரை இப்படம் வெளியாகவில்லை.
இதனிடையே, ‘ஜன நாயகன்’ படத்தின் 5 நிமிட காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது 3 மணி நேர முழு படமும் வெளியானதால் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. படம் இணையத்தில் வெளியானதை தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் வெளியானதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சிவகார்த்திகேயன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஒவ்வொரு திரைப்படமும் நூற்றுக்கணக்கானோரின் பேரார்வம், ரத்தம் மற்றும் வியர்வையின் மூலம் உருவாக்கப்படுகிறது. தயவுசெய்து திருட்டுத்தனமாகப் பார்ப்பதைத் தவிர்க்கவும். திரையரங்கு வெளியீடு வரும் வரை பொறுத்திருந்து, திரையரங்குகளிலேயே திரைப்படத்தைப் பார்வையிடுங்கள்.
இதற்குப் பொறுப்பானவர்கள் எவராயினும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
திறமைகளை மதியுங்கள்.
கடின உழைப்பை மதியுங்கள்.
திரையுலகத்தை மதியுங்கள் என்று கூறியுள்ளார்.