ஜன நாயகன் Link-கை பகிர்பவர்கள் மீது கடும் நடவடிக்கை- தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை

அனைத்து தரப்பினரும் படக்குழுவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
ஜன நாயகன் Link-கை பகிர்பவர்கள் மீது கடும் நடவடிக்கை- தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை
Published on

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ஜன நாயகன்’. தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் தொடர்பான சிக்கல்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக தற்போது வரை இப்படம் வெளியாகவில்லை.

இதனிடையே, ‘ஜன நாயகன்’ படத்தின் 5 நிமிட காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது 3 மணி நேர முழு படமும் வெளியானதால் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. படம் இணையத்தில் வெளியானதை தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

படம் இணையத்தில் வெளியானது தொடர்பாக இயக்குநர் ஹெச்.வினோத் கூறுகையில், ‘ஜன நாயகன்’ படத்தை யாரும் பகிர வேண்டாம். ஒவ்வொரு காட்சிகளும் பலரின் கனவை சுமந்து வருகிறது. அனைத்து தரப்பினரும் படக்குழுவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

இதனை தொடர்ந்து, ‘ஜன நாயகன்’ படத்தின் கசிந்த காட்சிகள் மற்றும் படத்தின் லிங்க்கை பகிர்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பட தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பலரின் உழைப்பு, முதலீ என்பதை கடந்து இந்த செயல் நேர்மையின்மையின் வெளிபாடு. அதை ஒருபோதும் மக்கள் ஆதரிக்கக்கூடாது என கேட்டுக்கொண்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com