சினிமா செய்திகள்

நம்பிக்கையை தட்டி எழுப்பும் முதல்வரின் வாக்கு- சீனு ராமசாமி

உங்களுடன் நான் இருக்கிறேன். இதைமீறி யாராவது கட்டாயப்படுத்தினால் இது எங்க மகன், எங்க பிள்ளை, எங்க அண்ணன், எங்க தம்பி, எங்க விஜய், எங்கள் விஜியோட ஆட்சி உறுதியா சொல்லுங்க என்றார்.

லஞ்சம் என்பது நம் சமூகத்தின் நோய். கொடுப்பதும் வாங்குவதும் ஒன்றுதான். இதை உணர்ந்தாலே நேர்மையான பாதை தெளிந்துவிடும். ஒளி பிறக்கட்டும் என்று இயக்குநர் சீனு ராமசாமி கூறியுள்ளார்.

நான் இருக்கிறேன்...

கரூரில் கடந்த ஆண்டு த.வெ.க. சார்பில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தின்போது நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். அவர்களின் குடும்பத்தினர் 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அறிவித்து இருந்தது.

அதன்படி, பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி அரசு விழா மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் ‘மக்கள் சந்திப்பு’ நிகழ்ச்சி ஆகியவை நேற்று கரூரில் நடந்தன. ‘மக்கள் சந்திப்பு’ நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய், உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது என்று சொல்லுங்கள். உங்களுடன் நான் இருக்கிறேன். இதைமீறி யாராவது கட்டாயப்படுத்தினால் இது எங்க மகன், எங்க பிள்ளை, எங்க அண்ணன், எங்க தம்பி, எங்க விஜய், எங்கள் விஜியோட ஆட்சி உறுதியா சொல்லுங்க. மக்களே... நீங்கள் கூட இருக்கும் போது லஞ்சம், ஊழல் கூட இல்லை, அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடும் யாராக இருந்தாலும் அடங்கிவிடுவார்கள். நம்பிக்கையுடன இருங்கள். நல்லதே நடக்கும் என்றார்.

லஞ்சம் என்பது நம் சமூகத்தின் நோய்

முதலமைச்சர் விஜயின் பேச்சு குறித்து பிரபல இயக்குநர் சீனு ராமசாமி எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

“லஞ்சம் கொடுக்காதே நான் இருக்கிறேன்.”

எளியோர்களின் பெருமூச்சையும் நம்பிக்கையையும் தட்டி எழுப்புகிறது மாண்புமிகு முதல்வரின் இந்த வாக்கு.

ஒரு அதிகாரம் தன் குடிமக்களுக்குத் தரும் மிகச்சிறந்த பாதுகாப்பு இதுதான்.

ஆனால், இந்த வெளிச்சம் நிலைக்க வேண்டுமானால் நாமும் மாற வேண்டும்.

லஞ்சம் என்பது நம் சமூகத்தின் நோய். கொடுப்பதும் வாங்குவதும் ஒன்றுதான்.

இதை உணர்ந்தாலே நேர்மையான பாதை தெளிந்துவிடும்.

ஒளி பிறக்கட்டும் என்று கூறியுள்ளார்.