சினிமா செய்திகள்

'சர்தார் 2' படத்திற்கு தேதி குறிச்சாச்சு!

2022-ல் 'சர்தார்' வெளியான உடனேயே இந்தப் படம் அறிவிக்கப்பட்ட போதிலும் , இதன் படப்பிடிப்பு 2024 ஜூலையில்தான் தொடங்கியது.

தமிழ் திரையுலகில் தனக்கென தனித்துவமான பாதையை உருவாக்கி மாஸ் மற்றும் கிளாஸ் என இரண்டு பாணிகளிலும் முத்திரை பதித்து வருபவர் நடிகர் கார்த்தி.

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற 'சர்தார்' திரைப்படத்தின் இரண்டாம் பாகமான 'சர்தார் 2' படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுடன் ரிலீசுக்குத் தயாராகி உள்ளது.

இந்த நிலையில், 'சர்தார் 2 ' படத்தின் வெளியீட்டுத் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. படக்குழு ஒரு வீடியோ காட்சி மூலம் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது.

வீடியோவில் ஒரு பெரிய தீப்பிழம்பு பற்றிக்கொள்ள, படத்தில் வயதான தோற்றத்தில் கார்த்தி துப்பாக்கிகளுடன் நிற்பது காணப்படுகிறது. மேலும் செப்டம்பர் மாதம் 10-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘சர்தார் 2’ படத்தில் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், ஷா ரா, யோகி பாபு, வி.டி.வி. கணேஷ், பாபு ஆண்டனி, ஓக் சுந்தர், அன்புதாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2022-ல் 'சர்தார்' வெளியான உடனேயே இந்தப் படம் அறிவிக்கப்பட்ட போதிலும் , இதன் படப்பிடிப்பு 2024 ஜூலையில்தான் தொடங்கியது.