சினிமா செய்திகள்

'சினிமாவிலிருந்து விலக நினைத்தேன்': கணவர் ராஜ் நிடிமோரு தான் என்னை தடுத்தார்-சமந்தா உருக்கம்!

சமந்தாவின் நடிப்புத் திறமை மீது முழு நம்பிக்கை வைத்தார் ராஜ் நிடிமோரு.

சமீபத்தில் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வரும் 'மா இன்டி பங்காரம்' திரைப்படத்தின் வெற்றி விழாவில், பிரபல நடிகை சமந்தா தனது திரைப்பயணத்தின் மிகக் கடினமான கட்டம் குறித்தும், சினிமாவில் இருந்து விலக நினைத்த முடிவு குறித்தும் உருக்கமாகப் பேசியுள்ளார்.

மயோசிடிஸ் உடல்நலக் குறைவு மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகள் காரணமாக, மக்கள் தன்னை நிராகரிப்பதாக சமந்தா உணர்ந்துள்ளார். "சமந்தாவின் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது" என்று வந்த விமர்சனங்களால் மனமுடைந்து, நடிப்பை முழுமையாக நிறுத்திவிடலாம் என்று அவர் முடிவு செய்துள்ளார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், அவரது கணவரும் பிரபல இயக்குநருமான ராஜ் நிடிமோரு தான் அவருக்குத் துணையாக நின்றுள்ளார். சமந்தாவின் நடிப்புத் திறமை மீது முழு நம்பிக்கை வைத்த ராஜ் நிடிமோரு, அவரை தொடர்ந்து படங்களில் நடிக்குமாறு வற்புறுத்தி, ஊக்கமளித்துள்ளார்.

ராஜ் நிடிமோருவின் கதையில், சமந்தாவின் சொந்த தயாரிப்பில் உருவான 'மா இன்டி பங்காரம்' (தமிழில் 'எங்கள் தங்கம்' என்ற பெயரில் வெளியானது) திரைப்படம் தற்போது ரூ. 50 கோடிக்கும் மேல் வசூலித்து மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்த வெற்றி விழாவில், தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியையும் உறுதிப்படுத்திய சமந்தா, இந்த வெற்றி தனக்கு ஒரு மறுபிறவி போன்றது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.