சினிமா செய்திகள்

மாறுபட்ட வேடத்தில் ராஷ்மிகா... ‘மைசா’ டீசர் வெளியானது!

படம் நவ.27ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே எழுதி இயக்கும் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனாவுடன் சமுத்திரகனி, ஈஸ்வரி ராவ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

பான் இந்தியா படமாக உருவாகி உள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நவ.27ம் தேதி வெளியாக உள்ளது.

டீசரை பார்க்கும்போது சமந்தாவின் மா இன்டி பங்காரம் போல, ராஷ்மிகா இப்படம் முழுவதும் ஆக்ஷன் காட்சிகளில் வருகிறார்.

SCROLL FOR NEXT