நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் வெளியான ராமாயணம் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்தியா, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உருவானது.
கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், 11 நாட்கள் முடிவில் உலகளவில் ரூ.1,384.50 கோடி வசூல் செய்துள்ளதாக வர்த்தக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரைப்படத்தின் 11-வது நாளான ஞாயிற்றுக்கிழமை (நேற்று) மட்டும் இந்தியாவில் ரூ.75 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த வசூல் ரூ.760.60 கோடியாக (Net) உயர்ந்துள்ளது. இந்தியாவில் மொத்த கிராஸ் வசூல் ரூ. 909 கோடியாகவும் (Gross), வெளிநாடுகளில் ரூ.475.50 கோடியாகவும் பதிவாகியுள்ளது.
மொழிவாரியான வசூலில் இந்தி பதிப்பு ரூ.55 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. கன்னடத்தில் ரூ.5.75 கோடியும், மலையாளத்தில் ரூ.5 கோடியும், தமிழில் ரூ.4.75 கோடியும், தெலுங்கில் ரூ.4.50 கோடியும் வசூலித்துள்ளது.
இரண்டாவது வார இறுதியிலும் வசூல் அதிகரித்திருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உலகளாவிய வசூலில் RRR மற்றும் துரந்தர் படங்களின் சாதனைகளையும் இப்படம் முந்தியுள்ளது. இரண்டாம் பாகம் 2028-ம் ஆண்டு தீபாவளி அன்று வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
நேற்று மட்டும் வெளிநாடுகளில் 40 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்தியாவில் படம் ரிலீஸ் ஆன வியாழக்கிழமை 64.85 கோடி ரூபாய் வசூல் ஆனது. வெள்ளிக்கிழமை 48.05 கோடி ரூபாய் வசூல் ஆனது. சனிக்கிழமை 69.80 கோடி ரூபாய் வசூல் ஆனது. ஆனால் திபாவளி நாளான ஞாயிற்றுக்கிழமை 56.15 கோடி ரூபாயாக சரிந்தது.
துரந்தர் 2, 11-வது நாளில் 18 கோடி ரூபாய் வசூல் செய்தது. வெளிநாடுகளில் 11 நாட்களில் மொத்தமாக மொத்தமாக 341 கோடி ரூபாய் வசூல் ஆனது. உலகம் முழுவதுமு் 1354.92 கோடி ரூபாய் வசூல் ஆனது.
மேலும், 1000 கோடி ரூபாய் வசூலித்த படங்கள் வரிசையில் இணைந்துள்ளது. ராமாயணம் 8 நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. அதேவேளையில் துரந்தர் 2, புஷ்பா 2 ஆகிய படங்கள் ஏழு நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.