சினிமா செய்திகள்

8 நாட்களில் ரூ.1000 கோடி வசூலை கடந்து 'ராமாயணா' சாதனை

இதுவரை வெளியான இந்திய படங்களில் அதிவேகமாக ரூ.1000 கோடி கடந்த மூன்றாவது திரைப்படம்

ராமாயணா படம் வெளியாகி 8 நாட்களில் உலகளவில் வசூல் ரூ.1000 கோடியை கடந்துள்ளது.

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, ரவி துபே மற்றும் யாஷ் ஆகியோர் நடித்த 'ராமாயணா: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்' திரைப்படம் கடந்த 6 ஆம் தேதி தீபாவளியை ஒட்டி வெளியானது.

படம் வெளியாகி 8 நாட்களில் உலகளவில் வசூல் ரூ.1000 கோடியை கடந்துள்ளது. இந்த மைல்கல்லை எட்டிய 11வது இந்திய படம் என்ற பெருமையை ராமாயணா பெற்றுள்ளது.

ஏற்கனவே ரூ.1000 கோடி மைல்கல் சாதனை படைத்த 'தங்கல்' படத்தின் இயக்குநர் நிதேஷ் திவாரி இந்த படத்தையும் இயக்கியுள்ளது கூடுதல் சிறப்பு.

வசூல்

உள்நாட்டு வசூலைப் பொறுத்தவரை, இப்படம் நேற்றைய நிலவரப்படி வியாழக்கிழமை), வெறும் எட்டு நாட்களில் இந்தியாவில் மட்டும் (அனைத்து மொழிகளையும் சேர்த்து) ரூ. 675.05 கோடி வசூலை கடந்தது.

இதன்மூலம் ஷாருக் கானின் ' பதான்' மற்றும் ரன்பீர் கபூரின் மற்றொரு ஹிட் படமான ' அனிமல் ' ஆகியவற்றின் வாழ்நாள் வசூல் சாதனைகளை ராமாயணா முறியடித்துள்ளது.

மேலும் வெளிநாடுகளில் இருந்து ரூ. 358.50 கோடி வசூலான நிலையில், ராமாயணாவின் உலகளாவிய மொத்த வசூல் ரூ. 1,033.55 கோடியாக உள்ளது.

உள்நாட்டில் ரூ. 560 கோடி வசூலைக் கடந்ததன் மூலம், 'ராமாயணா: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்' திரைப்படம், 'பதான்' (ரூ. 544.28 கோடி) மற்றும் சந்தீப் ரெட்டி வங்காவின் ' அனிமல் ' (ரூ. 556.36 கோடி) ஆகிய படங்களின் முழு திரையரங்கு வசூலை எளிதாக முறியடித்துள்ளது.

3வது இந்திய படம்

இதுவரை வெளியான இந்திய படங்களில் அதிவேகமாக ரூ.1000 கோடி கடந்த மூன்றாவது திரைப்படம் என்ற பெருமையையும் ராமாயணா பெற்றுள்ளது.

'புஷ்பா 2: தி ரூல்' மற்றும் 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' ஆகிய இரண்டு படங்கள் ஏழு நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூலை கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT