கட்டா குஸ்தி 2 
சினிமா செய்திகள்

விஷ்ணு விஷாலின் 'கட்டா குஸ்தி 2' படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்

10 நாட்களில் ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் ரூ.44 கோடிக்கும் அதிகமான வசூல்

கட்டா குஸ்தி 2 படத்தை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் தன்னை பாராட்டியதாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

கட்டா குஸ்தி 2

செல்லா அய்யாவு இயக்கத்தில் 2022 இல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவான படம் ‘கட்டா குஸ்தி 2’

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி இருவரும் கணவன் மனைவியாக முன்னணி நடித்துள்ள இப்படம் கடந்த ஜூலை 3 ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியானது.

முதல் பாகத்தில் இடம்பெற்ற கருணாஸ், முனீஷ்காந்த், காளி வெங்கட் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.

வெளியானது முதலே விமர்சன ரீதியாகவும் வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வசூல்

10 நாட்களில் ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் ரூ.44 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக படக்குழு அறிவித்துள்ளது.

முன்னதாக விஷ்ணு விஷால் நடித்து வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற "ராட்சசன்" திரைப்படம் ரூ. 40 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது அதிகமாக இருந்தது.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஒரு பிஎம்டபிள்யூ சொகுசு காரையும், இயக்குநர் செல்லா அய்யாவுக்கு 10 சவரன் தங்கச் சங்கிலியையும் பரிசாக வழங்கியது வைரலானது.

மேலும் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி மற்றும் படக்குழுவினருக்கு 40 கிராம் வெள்ளி நாணயமும் பரிசாக வழங்கினார்.

பாராட்டு

இந்நிலையில், ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னை வாழ்த்தியதாக நடிகர் விஷ்ணு விஷால் பதிவிட்டுள்ளார்.

அந்த பதவில்,

“செம்ம படம்! ரொம்ப ஜாலியான என்டெர்டெய்னர்.. இந்த மாதிரி படம் இப்போ வர்ரது இல்ல. எல்லாரும் நல்லா நடிச்சிருக்கிங்க. குட்டி சாரா பாப்பா பிரில்லியண்டா நடிச்சிருந்தாங்க. உங்களுக்கு நல்ல ஸ்கிரிப்ட் சென்ஸ் இருக்கு விஷ்ணு, நல்ல படங்கள் நிறைய கொடுங்க” என்று ரஜினிகாந்த் தன்னை பாராட்டியதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.