‘கட்டா குஸ்தி 2’ வெற்றி - நடிகர், இயக்குநரை சந்தோஷத்தில் ஆழ்த்திய தயாரிப்பாளர்!

படக்குழுவினருக்கு 40 கிராம் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.
‘கட்டா குஸ்தி 2’ வெற்றி - நடிகர், இயக்குநரை சந்தோஷத்தில் ஆழ்த்திய தயாரிப்பாளர்!
Published on: 

2022 இல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவான ‘கட்டா குஸ்தி 2’ ஜூலை.3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது .

இரண்டாம் பாகத்தையும் செல்லா அய்யாவு இயக்க, முதல் பாகத்தில் நடித்த விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கருணாஸ், முனீஷ்காந்த், காளி வெங்கட் ஆகியோர் தொடர்ந்து நடித்துள்ளனர்.

படம் வெளியாகி ஒரு வாரம் ஆகும்நிலையில், இதுவரை ரூ. 30 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிவருகிறது.

இந்நிலையில் இன்று படத்தின் வெற்றிவிழா நடந்தது. இந்த விழாவில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஒரு பிஎம்டபிள்யூ சொகுசு காரையும், இயக்குநர் செல்லா அய்யாவுக்கு 10 சவரன் தங்கச் சங்கிலியையும் பரிசாக வழங்கியுள்ளார்.

மேலும் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி மற்றும் படக்குழுவினருக்கு 40 கிராம் வெள்ளி நாணயமும் பரிசாக வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com