டி.சி.படத்தில் இருந்து காட்சி- நடிகர் பார்த்திபன் 
சினிமா செய்திகள்

லோகேஷ் கனகராஜ் Highly paid Action hero-வாக வலம் வருவார் - இயக்குநர் பார்த்திபன்

சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஒரு வெற்றி நாயகனாக களம் கண்டிருக்கும்லோகேஷ் கனகராஜ் Highly paid Action hero-வாக வலம் வருவார் என்று பார்த்திபன் கூறியுள்ளார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்து வெளியாகி உள்ள படம் ‘டி.சி’. இப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.

இப்படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு ஜோடியாக வாமிகா கபி நடித்துள்ளார். சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘டி.சி’ படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியது.

‘டி.சி.’ படத்தை திரைப்பிரபலங்களும் பார்த்து பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் ‘டி.சி.’ படம் தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

DC : Director & Commercial hero Lokesh kanagaraj

கடலில் சுனாமியாக,

காற்றில் சூறாவளியாக,

வெயிலில் அக்னியாக,

மழையில் இடியுடன் கூடிய,

அதிரடி அட்டகாசமென-ஏற்கனவே

வர்த்தக இயக்குனர்- ஒரு

வெற்றி நாயகனாக

களம் கண்டிருக்கும்

லோcash கனகராஜ்

Highly paid

Action hero-வாக

வலம் வருவார்.

விரல்களில் plastic rose

உதடுகளில் real rose

சுமக்கும் புதூ நாயகி

காண்போர் : conquer !

Always like Director Arun matheshwaran’s style of handling the script & Making the film

Anirudh = D C R super.

D C R = Daily Collection Reports என்று கூறியுள்ளார்.