'தங்கலான்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி வரும் அடுத்த பிரம்மாண்ட படைப்பான 'வேட்டுவம்' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், படக்குழுவினர் புதிய மாஸான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்தத் திரைப்படத்தில் முன்னணி நடிகர் ஆர்யா 'தர்மராஜன்' என்ற அதிரடியான முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில், ஆர்யா கையில் ஆயுதங்களுடன் பின்னால் கூட்டமும், புகையும் சூழ்ந்திருக்க ஆக்ரோஷமான தோற்றத்தில் காட்சியளிப்பது ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.
வழக்கமான ஆக்ஷன் படமாக இல்லாமல், இந்த உலகம் அழியும் நிலைக்குப் பிறகான ஒரு புதிய உலகப் பின்னணியில், பல்வேறு குழுக்களுக்கு இடையே நடக்கும் அதிகாரப் போராட்டத்தை மையமாகக் கொண்டு இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தில் 'அடிமுறை' மற்றும் 'மல்லகம்பம்' போன்ற இந்தியாவின் பழங்கால தற்காப்புக் கலைகள் மற்றும் வீர விளையாட்டுகள் ஆக்ஷன் காட்சிகளில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஆர்யா நடித்துள்ளார். இவருடன் இணைந்து அட்டகத்தி தினேஷ், சோபிதா துலிபாலா, கலையரசன், சபீர் கல்லரக்கல் மற்றும் குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் 'லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
'தங்கலான்' படத்தைத் தொடர்ந்து இந்தத் திரைப்படத்திற்கும் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்ய, செல்வா ஆர்.கே படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகவுள்ள 'வேட்டுவம்' திரைப்படம், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் மிகப்பெரிய ஆக்ஷன் விருந்தாக அமையும் எனத் திரையுலகினர் எதிர்பார்க்கின்றனர்.