விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'LIK' (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி). இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும், எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.
நயன்தாரா மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சென்னையில் இப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி, படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி மதுரை மற்றும் திருச்சியில் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து 'LIK' படம் நேற்று முன்தினம் முதல் திரையரங்குகளில் வெளியாக வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள 'LIK' படம் வசூலையும் குவித்து வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் 'LIK' படத்தின் முதல் நாள் வசூல் 7.2 கோடி என பட தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.