LIK- திரை விமர்சனம்
LIK- விமர்சனம்(3 / 5)
2040 ஆம் ஆண்டில் கதை தொடங்குகிறது.
பொது மக்களுக்காக lik என்ற புதிய ஆப் (App) ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. இந்த ஆப்-க்கு ஏஐ வாய்ஸ் கொடுக்கிறார் பிரதீப். இந்த ஆப்பை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கு எதிராக போன் உபயோகம் செய்யாமல், போனால் தவறு செய்தவர்களை தண்டனை தரும் விதமாக பசுமை உலகம் நடத்தி வருகிறார் பிரதீப்பின் தந்தை சீமான்.
பசுமை உலகத்தில் இருப்பவர்கள் போன் உபயோகம் செய்ய மாட்டார்கள். அந்த உலகத்தை சேர்ந்த பிரதீப் போன் உபயோகம் செய்யாமல் இருக்கிறார். ஒருநாள் வழியில் கீர்த்தி செட்டியை பார்க்கும் பிரதீப் காதல் வலையில் விழுகிறார்.
அதன்பிறகு போன் உபயோகம் செய்ய ஆரம்பிக்கிறார். அந்த போனில் lik ஆப் மூலம் கீர்த்தி செட்டியிடம் பேச ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த ஆப் மூலமாக இவர்கள் காதல் பிரிகிறது.
இறுதியில் பிரதீப், கீர்த்தி செட்டி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? அந்த lik ஆப் பொய் என்று பிரதீப் நிரூபித்தரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் பிரதீப், தனக்கே உரிய ஸ்டைலில் நடித்து அசத்தி இருக்கிறார். காதல், நடனம், நடிப்பு என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் கீர்த்தி செட்டி, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தற்போது சமூக வலைதளங்களில் பெண்கள் இருக்கும் நிலையை அப்படியே கண்முன் நிறுத்தி இருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் எஸ். ஜே.சூர்யாவின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். பிரதீப் உடன் போட்டி போடுவது, lik ஆப் பாதுகாக்க எந்த இடத்திற்கும் செல்வது என நடிப்பில் பளிச்சிடுகிறார். தந்தையாக மனதில் பதிந்து இருக்கிறார் சீமான். யோகி பாபு காமெடி பெரியதாக ஈடுபடவில்லை.
இயக்கம்
மனிதர்களுக்கும் ஆப்-கும் இடையே நடக்கும் உணர்வு, போராட்டத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். சூப்பர் ஃபேண்டஸி படமாக கொடுத்து இருக்கிறார். கிராபிக்ஸ் காட்சிகள் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள், வசனம் அனைத்தும் ரசிக்க வைக்கிறது. இளைஞர்கள் ரசிக்கும் படி இயக்கி இருக்கிறார். ஆனால், ஆரம்பம் முதல் இறுதி வரை சுவாரசியமான காட்சிகள் அதிகம் இல்லாதது வருத்தம். காமெடி காட்சிகள் ஓர்க்கவுட் ஆகவில்லை.
இசை
அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசையில் மாஸ் காண்பித்து இருக்கிறார்.
ஒளிப்பதிவு
ரவி வர்மன் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கலர்புல்.

