கதாபாத்திரத் தேவைக்கேற்ப உடலை மாற்றிக் கொள்வதில் ஆர்வம் காட்டி வரும் இவர், ஒரு படத்துக்காக சுமார் 9 கிலோ எடையைக் குறைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருந்தார் கீர்த்தி சுரேஷ்.
நடிப்பில் மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திலும் அதிக அக்கறை காட்டி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், தனது சமீபத்திய பேட்டியில் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் எடைக் குறைப்பு அனுபவம் குறித்து சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். கதாபாத்திரத் தேவைக்கேற்ப உடலை மாற்றிக் கொள்வதில் ஆர்வம் காட்டி வரும் இவர், ஒரு படத்துக்காக சுமார் 9 கிலோ எடையைக் குறைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருந்தார்.
தனது தற்போதைய உடல்நிலை மற்றும் உணவு முறை குறித்துப் பேசிய கீர்த்தி சுரேஷ், தற்போது மிகவும் ஆரோக்கியமாக உணர்வதாகக் குறிப்பிட்டுள்ளார். தனது அன்றாட உணவில் புரதச் சத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகத் தெரிவித்த அவர், தினமும் சுமார் 6 முதல் 7 முட்டைகளின் வெள்ளைக் கருக்களைச் சாப்பிடுவதாகக் கூறியுள்ளார்.
முட்டை வெள்ளைக் கருக்களுடன் சேர்த்து பன்னீர், கொண்டைக்கடலை, சோயா மற்றும் பல்வேறு பருப்பு வகைகளையும் தனது உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், செயற்கையான புரோட்டீன் ஷேக்குகளை அருந்துவதில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காகப் பட்டினி கிடப்பதற்குப் பதிலாக, சமச்சீரான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷின் இந்த அணுகுமுறை, ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.