‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்’ என்ற டைட்டில் காடுடன் படம் வெளியானது.
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'ஜனநாயகன்' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. தமிழகத்தில் மட்டும் இப்படம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் 8 ஆயிரம் வரையிலான திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டது.
இந்தப்படம் ஏற்கனவே சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடப்பட்டு இருந்தாலும், விஜய் நடித்துள்ள கடைசி படம் என்பதால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
தமிழகத்திற்கு முன்னதாகவே கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் ‘ஜன நாயகன்’ படம் வெளியானது. அப்போது ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்’ என்ற டைட்டில் கார்டுடன் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இப்போது வெளியாகி இருக்கும் ‘ஜன நாயகன்’ படத்தில் நிறைய புது விஷயங்களை புகுத்தி இருக்கிறார்கள். அதாவது கோட்சூட் போட்டு கலக்கி கொண்டிருக்கும் முதலமைச்சர் விஜய்யின் இப்போதைய தோற்றத்தையும், படத்தில் ஆங்காங்கே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
இப்படத்துக்கு தமிழகத்தில் மட்டுமே குறைந்த கட்டணத்தில் டிக்கெட் வழங்கப்படுகிறது. சென்னையில் ரூ.183 முதல் ரூ.190 வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கொச்சியில் ரூ.700 வரையிலும், டெல்லியில் ரூ.900 வரையிலும், மும்பையில் ரூ.1,000 வரையிலும், பெங்களூருவில் ரூ.2,500 வரையிலும் டிக்கெட் விற்பனையாகிறது.
‘ஜன நாயகன்’ படம் வெளியாவதற்கு முன்பு திரையரங்குகளில் கூடிய ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் ஆட்டம் பாடலுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திரைப்பிரபலங்கள் பலரும் ‘ஜன நாயகன்’ படத்தை காண திரையரங்கிற்கு வருகை தந்தனர்.
கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள்...
கோவையில் உள்ள கற்பகம் காம்ப்ளக்ஸ் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.