அரசு அதிகாரிகளுடன் ‘ஜன நாயகன்’ படத்தை கண்டுகளித்த முதலமைச்சர் விஜய்!

முதலமைச்சர் விஜய் பல முக்கிய அதிகாரிகளும் படத்தை கண்டுரசித்தனர்.
அரசு அதிகாரிகளுடன் ‘ஜன நாயகன்’ படத்தை கண்டுகளித்த முதலமைச்சர் விஜய்!
Published on

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ளப் படம் ஜன நாயகன். இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். பல சிக்கல்களுக்கு பிறகு இப்படம் நாளை (ஜூலை.23) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' திரைப்படத்தை சென்னை அடையாறில் உள்ள தாகூர் திரைப்பட அரங்கில் கண்டுகளித்தார்.

முதலமைச்சர் விஜய் உடன் அரசு தலைமைச் செயலக அதிகாரிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் இந்த சிறப்புத் திரையிடலில் படத்தை பார்த்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com