‘சிக்மா’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளநிலையில், படக்குழுவினருக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது;
“உங்கள் வரவு நல்வரவாகட்டும் சஞ்சய்..!
குட்டி சஞ்சய் இப்போது ஒரு இயக்குநர் ஆகிவிட்டார் என்பதை நம்பவே முடியவில்லை!
நாளை முக்கியமான நாள். சஞ்சய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சந்தீப் கிசன் மற்றும் படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரும், நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படம் சிக்மா. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜி.கே. தமிழ் குமரன் படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தில் சந்தீப் கிசன், ஃபரியா அப்துல்லா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமன் எஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
நாளை (அக்.2) படம் திரையரங்குகளில் வெளியாகிறது.