

அக்டோபர் மாதத்தில் பல புதிய படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. விஜய் சேதுபதி நடிப்பில் 'பத்தா', நிவின் பாலி நடிப்பில் 'ஏழு கடல் ஏழு மலை', ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களை கவரவிருக்கின்றன.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு மாதமும் பல படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. மேலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படங்களும் டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. அந்த வகையில் அக்டோபர் மாதம் வெளியாக உள்ள படங்கள் குறித்து பார்ப்போம்...
மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் பாலாஜி தரணிதரன் -விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‘பத்தா’. 80-களின் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் லிஜோமோல் ஜோஸ் நடித்திருக்கிறார். சாய் அபயங்கள் இசையமைத்திருக்கும் இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ள இப்படம் இன்று முதல் திரையரங்குகளில் காணலாம்.
ஜேசன் சஞ்சய் அறிமுக இயக்குநராக இயக்கி இருக்கும் படம், ‘சிக்மா’. சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்திருக்கும் இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் காதல் ஆக்ஷன் படம் ‘அன்பில் அவன்’. இந்தப் படத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படமும் நாளை முதல் திரையரங்குகளில் காணலாம்.
ஷஷாங்க் யெலெய்ட்டி இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்துள்ள நகைச்சுவைத் திரைப்படம் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’. மந்திரவாதியாக ஃபஹத் ஃபாசில் நடித்திருக்கும் இப்படத்தில் சாரா பலேகர், சவுரப் சச்தேவ், மகேஷ் மஞ்ரேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தெலுங்கு, மலையாளத்தில் உருவாகி இருக்கும் இப்படம் நாளை வெளியாகிறது.
சிவ ராஜ்குமார் நடிப்பில் பவன் வாடேயர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கன்னடப்படம் ‘பெயில்’. இப்படத்தில் சிவ ராஜ்குமாருடன் சஞ்சனா ஆனந்த், தீக்ஷித் ஷெட்டி, கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே, சாய் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். நாளை முதல் இப்படத்தை திரையரங்குகளில் காணலாம்.
திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் வெங்கடேஷ் டக்குபதி, ஸ்ரீநிதிஷெட்டி, நாரா ரோஹித், நிவேதா பெத்துராஜ், யுவினா, ராஜ் பிரஜ்வல், ராவ் ரமேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள நகைச்சுவை படம் ‘ஆதர்ஷா குடும்பம் வீடு எண்: 47- ஏகே 47’. தெலுங்கில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் வருகிற 9-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான படம் ‘ஜெயிலர்’. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘ஜெயிலர் 2’ என்ற பெயரில் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. முதல் பாகத்தைப் போலவே, இரண்டாம் பாகத்திலும் சிவராஜ்குமார், வித்யா பாலன், சூரஜ் வெஞ்சரமுடு என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ள படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 15-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ராகுல் சாங்கிருத்யன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஹாலிவுட் நடிகர் ஆர்னால்ட் வோல்லூ ஆகியோர் நடித்துள்ள படம் ‘ராணா பாலி’. 19-ஆம் நூற்றாண்டில் (1854-1878) பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் சென்னை மாகாணத்தின் பெரும் பஞ்சக் காலத்துச் சூழலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு அஜய் அதுல் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 16-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.
ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘இரண்டு வானம்’. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 23-ந்தேதி திரையரங்குகளில் காணலாம்.