ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் நேற்று (செப்.24) திரையரங்குகளில் வெளியான படம் ‘தி பாரடைஸ்’.
நீண்ட உழைப்பிற்கு பின் திரைக்கு வந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. பலரும் படத்தை ட்ரோல் செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில் ரசிகர்களிடம் இருந்து வரும் விமர்சனங்கள் தொடர்பாக நடிகர் நானி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
“உங்கள் எதிர்வினைகள் மற்றும் கருத்துகள் அனைத்தையும் நான் கவனித்தேன். உங்களின் அனைத்து அன்பையும் நான் பெற்றுக்கொண்டேன், அதே சமயம் நீங்கள் செய்த நகைச்சுவையான ட்ரோல்களையும் சமமாக ரசித்தேன்.
ரசிகர்கள் இப்படத்தைத் தங்கள் சொந்தப் படமாக ஏற்றுக்கொண்ட விதம் என் மனதை நெகிழவைத்தது; அதேவேளையில், விமர்சகர்கள் சுட்டிக்காட்டிய குறைகளிலிருந்தும் நான் கற்றுக்கொண்டேன்.
அனைத்திற்கும் நன்றி என்பதைத் தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை.
உங்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை அளிப்பதற்காக, மிகுந்த உழைப்பையும் அர்ப்பணிப்பையும் செலுத்தி நாங்கள் தி பாரடைஸ் படத்தை உருவாக்கியுள்ளோம்; இதைக் கொண்டாடுவதோ அல்லது விமர்சிப்பதோ உங்கள் கைகளில்தான் உள்ளது.
இப்படத்தின் மீது நீங்கள் கொண்டிருந்த ஆர்வத்திற்கும், என் மீது நீங்கள் காட்டிய அன்பிற்கும் நான் மிகுந்த நன்றியுணர்வுடன் இருக்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.