சினிமா செய்திகள்

வசூலில் சொதப்பிய ‘ஐ ஆம் கேம்’: பொறுப்பை நானே ஏற்கிறேன் - துல்கர் சல்மான் பதிவு!

படம் செப்.3ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ஆர்டிஎக்ஸ் திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து, சமீபத்தில் வெளியானப் படம் ‘ஐ ஆம் கேம்’. இப்படத்தை துல்கர் சல்மானே தயாரித்திருந்தார்.

சூதாட்டம், பந்தயம் மற்றும் கிரிக்கெட் விளையாட்டின் பின்னணியில், அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி, அதாவது தனது உயிரைவிட அதிர்ஷ்டமே பெரிது என வாழும் ஒருவனின் கதையை படம் விவரித்திருந்தது.

துல்கர் சல்மானுடன் இணைந்து கயாடு லோஹர், மிஷ்கின், ஆண்டனி வர்கீஸ், சம்யுக்தா விஸ்வநாதன், வினய் ஃபோர்ட் மற்றும் கதிர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஜேக்ஸ் பிஜாய் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் துல்கர் சல்மானின் நடிப்பு பாராட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் படத்திற்கு எழுந்த எதிர்மறையான விமர்சனங்களை தானே ஏற்பதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.

படத்தின் தோல்வி தொடர்பாக ரசிகரின் பதிவு ஒன்றிற்கு பதிலளித்து பதிவிட்டிருந்த துல்கர்.,

வெளிப்புற சூழல்

நான் உங்கள் பதிவை முழுமையாகப் படித்தேன். உங்கள் பகுப்பாய்வு தவறு என்று நான் சொல்லவில்லை; நீங்கள் பெரும்பாலும் சரியாகவே சொல்லியிருந்தீர்கள். அதையெல்லாம் நாங்களும் நன்கு அறிவோம் என்பதை நீங்கள் உணரவேண்டும்.

படக்குழு தரப்பில் எல்லாவற்றையும் சரியாக செய்தாலும், வெளிப்புறக் காரணிகள் அல்லது சூழல்கள் அந்த முடிவுகளைத் தலைகீழாக மாற்றிவிடக்கூடிய தருணங்கள் உண்டு. ஒரு திரைப்படத்தின் இறுதி வடிவத்தையோ அல்லது அதன் வெற்றியையோ பகுப்பாய்வு செய்வது எளிது.

ஆனால், ஒரு படத்தை உருவாக்க 200 முதல் 300 பேர் வரை தேவைப்படுகிறார்கள்; அது ஒருபோதும் எளிதானதோ அல்லது சாதாரணமானதோ அல்ல.

அதற்கென நிலையான சூத்திரங்களையோ அல்லது கல்விசார் கோட்பாடுகளையோ அப்படியே பொருத்திவிடவும் முடியாது. உலக சினிமாவில் எந்தவொரு தயாரிப்பு நிறுவனமோ அல்லது நடிகரோ வேண்டுமென்றே தவறுகளையோ அல்லது மோசமான படத்தையோ உருவாக்க நினைப்பதில்லை.

வாழ்க்கையில் எல்லாமே நீங்கள் நினைத்தபடியா நடந்திருக்கிறது?

இதற்கென தனியான சூத்திரமோ அல்லது கல்வி சார்ந்த விஷயங்களையோ பயன்படுத்த முடியாது. உலகத்தில் எந்த தயாரிப்பு நிறுவனமோ அல்லது நடிகரோ மோசமான படத்தை உருவாக்க வேண்டும் என நினைப்பதில்லை. நிஜ வாழ்க்கையிலேயே எல்லாமே நீங்கள் நினைத்தபடியா நடந்திருக்கிறது?

எனவே, ஒரு உட்புறக்குழ பல வெளிக்குழுக்களுடன் இணைந்து செயல்படும் ஒரு அமைப்பைப் பற்றி கற்பனை செய்து பாருங்கள். நான் எப்போதும் என் குழுவின் பக்கமே நிற்பேன்; நீங்கள் யாரையாவது குறை சொல்லவேண்டும் என்று நினைத்தால், என்னை குறை சொல்லிக் கொள்ளலாம்.” எனப் பதிலளித்துள்ளார்.

SCROLL FOR NEXT