ஐ ஆம் கேம்- திரை விமர்சனம்
ஐ ஆம் கேம்- விமர்சனம்(3 / 5)
கதை
கோடீஸ்வரரின் மகனான துல்கர் சல்மான், சூதாட்டத்திற்கு அடிமையாகி சொத்துகளையும் பணத்தையும் இழக்கிறார். இந்த நிலையில் எதிர்பாராத விபத்தில் சிக்கி தனது வலது கையையும் இழக்கிறார்.
அவருக்கு வேறொருவரின் கை பொருத்தப்படுகிறது. ஆனால், அந்த கை துல்கரின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தன்னிச்சையாக ஒருவரைக் கொலை செய்யத் துடிக்கிறது.
அந்தக் கை யாருடையது? அது ஏன் கொலை செய்யத் துடிக்கிறது? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதற்கான விடைதான் படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
தன் கையே தனது கட்டுப்பாட்டில் இல்லாமல் தன்னுடன் மல்லுக்கட்டும் காட்சிகளில் துல்கர் சல்மானின் தவிப்பும் ஏக்கமும் பார்வையாளர்களை கவர்கிறது.
ஆண்டனி வர்கீஸ் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். கிரிக்கெட் அணியின் கேப்டனாக கதிர், அணியின் உரிமையாளராக மிஷ்கின் மிரட்டுகின்றனர்.
டாக்டர் கதாபாத்திரத்தில் கயாடு லோஹர் மற்றும் சம்யுக்தா ஆகியோரின் நடிப்பும் கதைக்கு வலு சேர்க்கிறது.
இயக்கம்
வித்தியாசமான கதைக்களத்தை கையில் எடுத்துக் கொண்டு, கிரிக்கெட் மோசடியையும் மனிதக் கையையும் இணைத்து விறுவிறுப்புடன் படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் நகாஸ் ஹிதாயத்.
கிரிக்கெட் மோசடியும், கட்டுப்பாட்டை மீறிய மனிதக் கையும் மல்லுக்கட்டும் வித்தியாசமான கதைக்களம்.
இசை & ஒளிப்பதிவு
ஜேக்ஸ் பிஜாய் இசையும், ஜிம்சி காலித்தின் ஒளிப்பதிவும் படத்தின் பரபரப்பான காட்சிகளுக்கு துணை நிற்கின்றன.

