சினிமா செய்திகள்

தவெக ஆட்சி எப்படி உள்ளது?: ஓரே வார்த்தையில் பதிலளித்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷின் சாதுரியமான பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தேசிய விருதைப் பெற்ற பிறகு அகமதாபாத் வழியாக சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்த ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இந்திய திரையுலகின் உயரிய விருதான 72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘அமரன்’ திரைப்படத்திற்கு சிறந்த பின்னணி இசை அமைத்ததற்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

தேசிய விருதைப் பெற்ற பிறகு அகமதாபாத் வழியாக சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்த ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமக்கு 3-வது முறையாக தேசிய விருது கிடைத்திருப்பது அளப்பரிய மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் தருவதாகத் தெரிவித்தார். மேலும், தமிழ் திரைப்பட உலகிற்கு இந்த முறை அதிக எண்ணிக்கையிலான தேசிய விருதுகள் கிடைத்துள்ளது தமிழ் சினிமா துறைக்கு கிடைத்த மாபெரும் பெருமை என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

விஜயின் தவெக ஆட்சிக்கு பதில்

செய்தியாளர்கள் சந்திப்பின் போது, 'தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி எப்படி இருக்கிறது?' என நிருபர் ஒருவர் ஜி.வி. பிரகாஷிடம் கேள்வி எழுப்பினார். தவெக அரசின் செயல்பாடு குறித்த கேள்விக்கு சற்றும் தயங்காமல் "சூப்பர்", (They are trying to do their best) "வாழ்த்துகள் "என ஒரே வார்த்தையில் பதிலளித்தார் ஜி.வி.பிரகாஷ்.

தேசிய விருது பெற்ற கொண்டாட்டத் தருணத்தில் தேவையில்லாத அரசியல் கேள்விகளை எழுப்புவதைத் தவிர்த்து, தனது இசைப் பயணத்தின் சாதனையை மட்டும் சுட்டிக்காட்டி ஜி.வி. பிரகாஷ் அளித்த இந்தச் சாதுரியமான பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT