சினிமா செய்திகள்

வரும் 23-ல் திரைக்கு வரும் ‘ஹைக்கூ’- கோலாகலமாக நடைபெற்ற இசை வெளியீட்டு விழா!

‘ஹைக்கூ’ திரைப்படம் சினிமாத் துறையில் ஒரு பெரிய குறையைப் போக்கும்.

பெண்களின் மனதை வெல்லும் படைப்பாக உருவாகியுள்ள ஹைக்கூ படத்தின் இசை விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி.அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிப்பில், இயக்குநர் யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹைக்கூ’. வரும் அக்டோபர் 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரையுலகப் பிரபலங்கள் பலரின் கலந்துகொள்ளலுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜ்மோகன், தளபதியின் பல படங்கள் வெற்றிகரமாக ஓடிய திரையில் தன் தம்பி ஏகன் நடித்துள்ள படம் வெளியாகிறது என்றும், நல்ல கருத்துகளுடன் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ‘ஹைக்கூ’ திரைப்படம் சினிமாத் துறையில் ஒரு பெரிய குறையைப் போக்கும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் வாழ்த்து தெரிவித்தார்.

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறுகையில், இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையேயான மன ஒற்றுமைகளையும், வேறுபாடுகளையும் இயக்குநர் மிகத் துல்லியமாகப் படமாக்கியுள்ளதாகவும், இப்படத்திற்கு சித்துகுமார் அற்புதமான இசையைக் கொடுத்துள்ளதாகவும் பாராட்டினார். இதனைதொடர்ந்து, எந்தவொரு கட்டுப்பாடுகளும் விதிக்காமல் தனக்கு முழு சுதந்திரம் கொடுத்துப் படம் தயாரிக்க உதவிய தயாரிப்பாளர் அருள் சாருக்கும், தம்மை முழுமையாக நம்பி பணியாற்றிய நடிகர் நடிகைகளுக்கும் இயக்குநர் யுவராஜ் நன்றி தெரிவித்தார். விஷன் சினிமா ஹவுஸின் மூன்றாவது படமான இது, தமிழ் சினிமாவில் ஏகனுக்கான மைல்கல்லாக அமையும் எனத் தயாரிப்பாளர் அருளானந்து பெருமிதம் தெரிவித்தார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன், இயக்குநர் சசி, இயக்குநர் பொன்ராம், இசையமைப்பாளர் சித்துகுமார், பாடலாசிரியர் மோகன்ராஜா மற்றும் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டு படம் வெற்றியடைய வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். இசை மற்றும் கவிதை வடிவில் காதலை முற்றிலும் புதிய கோணத்தில் பேசும் இப்படம், வரும் 23-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT