சினிமா செய்திகள்

தேர்தல் நெருங்குகிறது கட்டாயம் ஓட்டு போடுங்கள்... ஆனால்... அரசியல் பேசிய ஜி.வி.பிரகாஷ்

நமது வாக்கு சதவீதம் உயரவேண்டும். அதுதான் நாட்டுக்கு நல்லது.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 'ஹேப்பி ராஜ்' என்ற படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஜி.வி.பிரகாஷ், சட்டமன்ற தேர்தல் குறித்து பேசிய விஷயங்கள் கவனம் ஈர்த்துள்ளன.

அவர் பேசுகையில், "தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்குகிறது. இந்த தேர்தலில் அனைவரும் கட்டாயம் ஓட்டுப்போடுங்கள். புதிய வாக்காளர்களும் ஆர்வமுடன் ஓட்டுப் போடுங்கள். நமது வாக்கு சதவீதம் உயரவேண்டும். அதுதான் நாட்டுக்கு நல்லது.

இந்தக் கட்சி, அந்தக் கட்சி என்று நான் பேச விரும்பவில்லை. அரசியலில் நான் இல்லை. அரசியல் நிலைப்பாடு குறித்தும் சொல்லியது இல்லை. ஓட்டுப்போடும் ஜனநாயக கடமையை தவறாமல் செய்யுங்கள் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்” என்று கூறி டக்கென பதிலை முடித்துக்கொண்டார் ஜி.வி.பிரகாஷ்.

SCROLL FOR NEXT