Dhanush | ஹேப்பி ராஜ் surprising-ஆ இருக்கு... தனுஷ் கொடுத்த ரிவ்யூ

ஹேப்பி ராஜ் திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
Dhanush | ஹேப்பி ராஜ் surprising-ஆ இருக்கு... தனுஷ் கொடுத்த ரிவ்யூ
Published on: 

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் "ஹேப்பி ராஜ்." வருகிற மார்ச் 27-ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் நிலையில், இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று (மார்ச் 17) மாலை வெளியானது. டிரெய்லரின் படி இந்தப் படம் காமெடி ஜானரில் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

அறிமுக இயக்குநர் மரிய ராஜா இளஞ்செழியன் இயக்கி இருக்கும் ஹேப்பி ராஜ் திரைப்படத்தின் டிரெய்லரை நடிகர் தனுஷ் மற்றும் திரை பிரபலங்கள் பலர் வெளியிட்டனர். டிரெய்லரை வெளியிட்ட நடிகர் தனுஷ் "ஹேப்பி ராஜ்" திரைப்படத்தின் ரிவ்யூவை எக்ஸ் தளத்தில் பகிர்நதுள்ளார். தான் படத்தை பார்த்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த பதிவில் அவர், "நான் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டேன்; இது ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் அவரது குழுவினரிடம் இருந்து, மிகவும் நகைச்சுவையான அதே சமயம் ஆச்சரியமூட்டும் வகையில் நெகிழ்ச்சியூட்டும் ஒரு படைப்பாகும். அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்," என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com