தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, நடித்த ‘பாக்கெட் நாவல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில் விரைவில் படம் வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு பின் தியாகராஜன் குமாரராஜா - விஜய் சேதுபதி இணையும் படம் பாக்கெட் நாவல். இப்படத்தில் மாளவிகா மோகனன், ராஜ் பி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.
தற்போது விஜய் சேதுபதியின் பத்தா திரையரங்குகளில் வெளியாகி வெற்றிக்கரமாக ஓடிவருகிறது. விரைவில் மிஷ்கின் இயக்கத்தில் உருவான டிரைன் வெளியாகிறது. அதனைத்தொடர்ந்து பாக்கெட் நாவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.