ரோமஞ்சம், ஆவேசம் படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 47வது படத்திற்கு ‘சீன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
படத்தில் மூத்த நடிகர் லால், லுங்கி பாய்ஸ் ராஜ்பிரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட், ழகரம் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் படத்திற்கு சுசின் ஷ்யாம் இசையமைக்கிறார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6ம் தேதி படம் வெளியாகிறது. படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் பிற அறிவிப்புகள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.