சினிமா செய்திகள்

இணையத்தில் வெளியான ‘ஜன நாயகன்’- வேண்டுகோள் விடுத்த எச்.வினோத்

‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் வெளியானதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வெளியீட்டிற்கு தயாராக உள்ள படம் ‘ஜன நாயகன்’. இப்படம் கடந்த ஜனவரி மாதம் 9-ந்தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் தொடர்பான சிக்கல்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக தற்போதுவரை படம் வெளியாகவில்லை.

இதனிடையே, ‘ஜன நாயகன்’ படத்தின் 5 நிமிட காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது 3 மணி நேர முழு படமும் வெளியானதால் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

‘ஜன நாயகன்’ படம் சமூக வலைத்தளங்களில் வெளியானதை தொடர்ந்து இயக்குநர் ஹெச்.வினோத் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் ஹெச்.வினோத் கூறியிருப்பதாவது:-

‘ஜன நாயகன்’ படத்தை யாரும் பகிர வேண்டாம். ஒவ்வொரு காட்சிகளும் பலரின் கனவை சுமந்து வருகிறது. அனைத்து தரப்பினருலும் படக்குழுவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் வெளியானதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT