முழு படமும் இணையத்தில் லீக்... ‘ஜன நாயகன்’ படக்குழு அதிர்ச்சி

தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் தொடர்பான சிக்கல்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக தற்போதுவரை படம் வெளியாகவில்லை.
முழு படமும் இணையத்தில் லீக்...   ‘ஜன நாயகன்’ படக்குழு அதிர்ச்சி
Published on

ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வெளியீட்டிற்கு தயாராக உள்ள படம் ‘ஜன நாயகன்’. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படம்தான் நடிகர் விஜய்யின் கடைசிப் படம் எனக் கூறப்படுகிறது. இதனால் இப்படத்தின்மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதனிடையே, ‘ஜன நாயகன்’ படம் இப்படம் கடந்த ஜனவரி மாதம் 9-ந்தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் தொடர்பான சிக்கல்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக தற்போதுவரை படம் வெளியாகவில்லை.

இந்த நிலையில், ‘ஜன நாயகன்’ படத்தின் 5 நிமிட காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது 3 மணி நேர முழு படமும் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது.

சட்டவிரோதமாக இணையத்தில் முழு படமும் வெளியான நிலையில், இதனை யார் வெளியிட்டிருப்பார்கள் என்பது குறித்து புகார் அளிக்கப்படும் என கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com