இணையத்தில் கசிந்த ‘ஜன நாயகன்’ காட்சிகள்... அதிர்ச்சியில் படக்குழு!

ஜன நாயகன் படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது.
இணையத்தில் கசிந்த ‘ஜன நாயகன்’ காட்சிகள்... அதிர்ச்சியில் படக்குழு!
Published on

ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வெளியீட்டிற்கு தயாராக உள்ளப் படம் ஜன நாயகன். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே,

பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

இப்படம்தான் நடிகர் விஜய்யின் கடைசிப் படம் எனக் கூறப்படுகிறது. இதனால் இப்படத்தின்மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படம் கடந்த ஜனவரி 9 அன்றே வெளியாக இருந்தது. ஆனால், தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் தொடர்பான சிக்கல்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக தற்போதுவரை வெளியாகவில்லை. எப்போது வெளியாகும் என்றும் தெரியவில்லை.

இந்நிலையில் இப்படத்தின் காட்சிகள் சில இணையத்தில் கசிந்துள்ளன. இதனால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com