சினிமா செய்திகள்

‘டேர் டெவில்’ படப்பிடிப்பு நவம்பரில் தொடக்கம்!

கடந்தாண்டு ஏப்ரலில் குட் பேட் அக்லி வெளியாகி இருந்தது.

நடிகர் அஜித்குமார் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் மீண்டும் உருவாக உள்ள ‘டேர் டெவில்’ படத்தின் படப்பிடிப்பு நவ.2ம் தேதி தொடங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

பிரேவ்ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் பதாகையின்கீழ் இப்படத்தை நடிகை ஷாலினி அஜித்குமார் தயாரிக்கிறார். இதுவே ஷாலினி தயாரிக்கும் முதல் படமாகும். விடாமுயற்சி படத்திற்கு பிறகு அனிருத் ரவிச்சந்தர் அஜித்தின் படத்திற்கு இசையமைக்கிறார்.

கடந்த ஒரு வருடமாக கார் ரேஸில் கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித்குமார், இதன்மூலம் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்புகிறார்.

குட் பேட் அக்லி

ஆதிக் ரவிச்சந்தர் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான படம் குட் பேட் அக்லி. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், அஜித்குமார் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்தது. வசூல்ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இந்நிலையில் டேர் டெவில் படத்தில் ஆதிக் - அஜித் கூட்டணி மீண்டும் இணைகிறது.

SCROLL FOR NEXT