மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி: முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் அஜித்குமார் நன்றி தெரிவிப்பு!

மோட்டார்ஸ்போர்ட்ஸ் நகரத்தை உருவாக்கும் திட்டத்தை அறிவித்ததற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு நடிகர் அஜித் குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
மோட்டார்ஸ்போர்ட்ஸ் சிட்டி: முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த நடிகர் அஜித்குமார்!
Published on

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில், இன்றைய அவை நடவடிக்கையின்போது, 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில் தமிழ்நாட்டில் புதிதாக ஒலிம்பிக் நகரம் மற்றும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் விஜய்யின் இந்த அறிவிப்புக்கு அவரது திரைத்துறை நண்பரும், நடிகருமான அஜித்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள நடிகர் அஜித்குமார்.,

”கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான தமிழ்நாடு அரசின் திட்டங்களை அறிவித்ததன் மூலம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுத் துறைகளுக்கும் தேவையான கவனத்தை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

தற்போது மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையில் நான் ஈடுபட்டிருப்பதால், விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் புகழ்பெற்ற பொன்மொழியை நான் இவ்வாறு மாற்றி கூறுகிறேன்.

“தமிழ்நாடு அரசின் ஒரு சிறிய அடி, இந்தியாவின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறைக்கான ஒரு மாபெரும் பாய்ச்சல்!’

முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அனைத்து முயற்சிகளும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்.” என தெரிவித்துள்ளார்.

மனைவி தயாரிப்பில் அஜித்குமார்

நடிகர் அஜித்குமார் தற்போது கார் ரேஸில் ஈடுபட்டு வந்தாலும், ரசிகர்களுக்கு உற்சாகமளிக்க இடையிடையே சில படங்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஆத்விக் இயக்கத்தில், மனைவி ஷாலினி தயாரிப்பில் டேர் டெவில் படத்தில் நடித்துவருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com