‘நிழல் போல நானும் நடை போட நீயும்’ - மனைவி தயாரிப்பில் நடிக்கும் அஜித்குமார்!

அஜித்தின் 64வது படத்திற்கு டேர் டெவில் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
‘நிழல் போல நானும் நடை போட நீயும்’ - மனைவி தயாரிப்பில் நடிக்கும் அஜித்குமார்!
Published on

குட் பேட் அக்லி-யைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமாரின் 64வது படத்தையும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசை அமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் தயாரிப்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை நடிகையும், அஜித்குமாரின் மனைவியுமான ஷாலினி அஜித்குமாரே தயாரிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ப்ரேவ்ஹார்ட்ஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்.

மேலும் படத்திற்கு டேர் டெவில் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே ஷாலினி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியானநிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com