நடிகர் அஜித் 
சினிமா செய்திகள்

அடேங்கப்பா... படப்பிடிப்புக்கு முன்பே இத்தனை கோடி வியாபாரமா?

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே படத்தின் முதல்கட்ட வியாபாரம் முடிந்திருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க உரிமை, ஓ.டி.டி. உரிமை மற்றும் சாட்டிலைட் உரிமை என ஒட்டு மொத்தமாக ரூ.180கோடி வரை படத்தின் வியாபாரம் முடிந்திருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், கார் பந்தயத்திலும் அசத்தி விருதுகள் மேல் விருதுகளை குவித்து வருகிறார். கடந்த ஆண்டு அஜித்குமார் நடிப்பில் 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாகி ‘ஹிட்’ அடித்திருந்தது. இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். இந்தப் படத்துக்கு பிறகு அஜித் குமார் கார் பந்தயங்களில் பிசியானார்.

டேர் டெவில்

இதற்கிடையில் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். படத்துக்கு 'டேர் டெவில்' என்று பெயர் சூட்டியுள்ளனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த புதிய படத்தின் 'அப்டேட்’ ஒன்று வெளியாகி இருக்கிறது.

ரூ.180 கோடி வியாபாரம்

அதாவது படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க உரிமை, ஓ.டி.டி. உரிமை மற்றும் சாட்டிலைட் உரிமை என ஒட்டு மொத்தமாக ரூ.180கோடி வரை படத்தின் வியாபாரம் முடிந்திருப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே படத்தின் முதல்கட்ட வியாபாரம் முடிந்திருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

திரைப்பட தயாரிப்பில் அஜித்தின் சொந்த நிறுவனம் களமிறங்குவது மற்றும் 'குட் பேட் அக்லி' படத்தின் மிகப்பெரிய வெற்றி ஆகியவையே படப்பிடிப்புக்கு முன்பே இந்த அளவிலான வணிக மதிப்பைப் பெற முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT