சினிமா செய்திகள்

நீக்கப்பட்ட டிடிஎப்: புதிய 'மஞ்சள் வீரன்'-ஆக கூல் சுரேஷ்?

மஞ்சள் வீரன் படம் மூலம் டிடிஎப் வாசன் கதாநாயகனாக அறிமுகமாக இருந்தார். மஞ்சள் வீரன் படத்தை செல் அம் இயக்குகிறார்.

பிரபல யூடியூபரும், சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவருமான டிடிஎஃப் வாசன் தமிழ் திரையுலகில் கதாநாயகனமாக அறிமுகமாக இருந்த திரைப்படம் 'மஞ்சள் வீரன்.' செல் அம் இயக்கும் இந்தப் படத்தின் பூஜை போடப்பட்டு, படப்பிடிப்பு பணிகள் துவங்கியதாக தெரிகிறது.

எனினும், பல்வேறு காரணங்களால் 'மஞ்சள் வீரன்' படத்தில் இருந்து டிடிஎப் வாசன் நீக்கப்பட்டார். படத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற காரணத்தால் டிடிஎப் வாசன் நீக்கப்பட்டதாக படத்தின் இயக்குநர் செல் அம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், 'மஞ்சள் வீரன்' படத்தில் இருந்து நீக்கப்பட்ட டிடிஎப் வாசனுக்கு பதிலாக கூல் சுரேஷ் இந்தப் படத்தின் கதாநாயகனாக நடிப்பதாக தகவல் வெளியானது. தற்போது, இந்தப் படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டதாகவும், இதில் கூல் சுரேஷ் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவே தெரிகிறது.

ஆனாலும், மஞ்சள் வீரன் படம் குறித்த அடுத்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூல் சுரேஷ் தெரிவித்தார். 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.