சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒப்பீடு: 'எனக்கான தனித்துவமே முக்கியம்'- நடிகர் ரிஷிகாந்த் தெளிவு!

ரிஷிகாந்தின் உடல் மொழி, தோற்றம் மற்றும் பேச்சு வழக்கில் ரஜினிகாந்தின் சாயல் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

'டெம்பிள் மங்கீஸ்' யூடியூப் தளத்தின் மூலம் தனது கலை பயணத்தை தொடங்கிய ரிஷிகாந்த், திரையுலகில் ஒரு முன்னணி கதாபாத்திரத்தை பிடிக்க சுமார் 15 ஆண்டுகள் வரை தீவிர முயற்சி செய்து வந்துள்ளார்.

திரையுலகில் அறிமுகமாகும் இளம் நடிகர்கள் சில சமயங்களில் மூத்த முன்னணி நட்சத்திரங்களின் தோற்றம் அல்லது நடிப்பு பாணியுடன் ஒப்பிடப்படுவது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'மொத ராத்திரி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் ரிஷிகாந்த், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தன்னை ஒப்பீடு செய்வது குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

15 ஆண்டுகால திரை பயணம்

'டெம்பிள் மங்கீஸ்' யூடியூப் தளத்தின் மூலம் தனது கலை பயணத்தை தொடங்கிய ரிஷிகாந்த், திரையுலகில் ஒரு முன்னணி கதாபாத்திரத்தை பிடிக்க சுமார் 15 ஆண்டுகள் வரை தீவிர முயற்சி செய்து வந்துள்ளார். பின்னணி பலம் ஏதுமின்றி சொந்த முயற்சியால் முன்னேறிய இவர், 'ஹீரோ', 'இந்தியன் 2', 'கூலி' போன்ற திரைப்படங்களிலும், 'மாதகம்' இணையத் தொடரிலும் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவான 'மொத ராத்திரி' திரைப்படம் இவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இத்திரைப்படத்தில் இவரது இயல்பான நடிப்பு ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்களிடையே பெரும் பாராட்டுகளை பெற்றது.

நடிகர் ரஜினி சாயல்

ரிஷிகாந்தின் உடல் மொழி, தோற்றம் மற்றும் பேச்சு வழக்கில் ரஜினிகாந்தின் சாயல் இருப்பதாக சமூக வலைத்தளங்களிலும் சினிமா வட்டாரங்களிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசிய ரிஷிகாந்த், "ரஜினிகாந்த் சாருடன் என்னை ஒப்பிட்டுப் பேசுவது பற்றித் தொடர்ச்சியாக என் கவனத்திற்கு வந்துகொண்டே இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், எவருடைய சாயலாகவும் அறியப்படாமல், தனக்கென்று ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கவே விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT