அப்பா, அம்மா வீட்டை அடமானம் வைத்து படம் எடுத்தேன்- அசோக் செல்வன்

‘அன்பில் அவன்’ படம் ரொம்ப ஸ்பெஷலான படம். எல்லோரும் தியேட்டருக்கு வந்து படத்தை பாருங்கள் என்றார்.
அசோக் செல்வன்
அசோக் செல்வன்
Published on
Summary

அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ படத்தின் முன்னோட்ட விழாவில், அவர் பெற்றோரின் வீட்டை அடமானம் வைத்து படத்துக்கு நிதி திரட்டியதாக உணர்ச்சியுடன் பகிர்ந்தார். 70 அடி உயரத்தில் டூப் இல்லாமல் குதித்த ஸ்டண்ட், அவரது அர்ப்பணிப்பை காட்டுகிறது. கோவிந்த் வசந்தா இசையமைத்த இந்த படம் ஹேப்பி ஹைபிக்சர்ஸ், ஐங்கரன் இண்டர்நேஷனல் தயாரிப்பில் 25ம் தேதி வெளியாகிறது.

அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘அன்பில் அவன்’. படத்தில் கதாநாயகியாக பிரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். ஒரு காட்சியில் அசோக் செல்வன் 70 அடி உயரத்தில் இருந்து டூப் போடாமல் குதித்துள்ளார். ஹேப்பி ஹைபிக்சர்ஸ் நிறுவனம் ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனங்கள் தயாரித்துள்ள இந்த படம் வருகிற 25-ந்தேதி திரைக்கு வர இருக்கிறது.

படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் நடந்தது. விழாவில் அசோக் செல்வன் பேசியதாவது:-

முதலில் நான் என் அப்பா, அம்மாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நிறைய காரணங்கள் இருக்கிறது. முக்கியமான காரணம் என்னவென்றால் ஒரு கட்டத்தில் பைனான்ஸ் அதிகமாகி கொண்டே சென்றது. அப்போது அப்பா, அம்மாவின் வீட்டு பத்திரத்தைதான் அடமானம் வைத்தேன். ஒரு படத்தில் என் பெயர் இருந்தால் அந்த படத்தில் என்னுடைய கடுமையான உழைப்பு இருக்கும். அது என்னோட பிராமிஸ். ‘அன்பில் அவன்’ படம் ரொம்ப ஸ்பெஷலான படம். எல்லோரும் தியேட்டருக்கு வந்து படத்தை பாருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் நடிகர்கள் கவுதம்ராம் கார்த்திக், ஹரீஷ் கல்யாண், இயக்குனர்கள் விக்னேஷ் கார்த்திக், அஸ்வத் மாரிமுத்து, ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com