சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவுக்கு முதலமைச்சர் விஜயின் தீபாவளி பரிசு- 224 தமிழ் பட தயாரிப்பாளர்களுக்கு ரூ.15.68 கோடி மானியம் விடுவிப்பு!

வணிக ரீதியான லாபங்களைத் தாண்டி சமுதாயத்திற்கு நற்கருத்துக்களை வழங்கும் குறைந்த பட்ஜெட் திரைப்படங்களை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஏராளமான தயாரிப்பாளர்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்த சூழலில் அரசு எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கைக்குத் தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் குறைந்த பட்ஜெட்டில் தரமான மற்றும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் திரைப்படங்களை உருவாக்கும் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், கடந்த ஏழு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த திரைப்பட மானியத் தொகையை தமிழக அரசு தற்போது விடுவித்துள்ளது. முதலமைச்சர் விஜயின் உத்தரவின்படி, 224 தமிழ் படங்களின் தயாரிப்பாளர்களுக்கு மொத்தம் ரூ.15.68 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

7 ஆண்டு கால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி

கடந்த 2015 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட படங்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரசு மானியம் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது. ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் தலைமையிலான தேடுதல் குழுவினர் தகுதியான படங்களைத் தேர்வு செய்திருந்தனர். இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்டு தகுதியான 224 தயாரிப்பாளர்களுக்கு தலா ரூ. 7 லட்சத்திற்கான மானியத் தொகைகளை நேரடியாக வழங்கினார்.

தயாரிப்பாளர் டி. சிவா நெகிழ்ச்சி

ஏராளமான தயாரிப்பாளர்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்த சூழலில் அரசு எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கைக்குத் தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளர் டி.சிவா தனது சமூக வலைதளப் பக்கத்தில், இது வெறும் மானியம் மட்டுமல்ல, திரைப்படத் துறையைச் சார்ந்த பல குடும்பங்களுக்குக் கிடைத்த சிறந்த தீபாவளிப் பரிசு என்று குறிப்பிட்டுள்ளார்.

பயனடைந்தவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் தயாரிப்புப் பணியால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் என்பதால், அரசின் இந்த உதவி அவர்களின் வாழ்வில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.

வணிக ரீதியான லாபங்களைத் தாண்டி சமுதாயத்திற்கு நற்கருத்துக்களை வழங்கும் குறைந்த பட்ஜெட் திரைப்படங்களை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். எதிர்காலத்தில் தமிழ் சினிமாவுக்கான அரசு விருதுகள் மற்றும் மானியங்கள் எவ்வித சிபாரிசுகளும் இன்றி, முழுமையான தகுதியின் அடிப்படையில் மட்டுமே வெளிப்படையாக வழங்கப்படும் என்று அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அரசு வழங்கியுள்ள இந்த நிதியுதவி தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT