தமிழக முதலமைச்சர் விஜய் சமீபத்தில் தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடினார். பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லியபோதும், நடிகை திரிஷா அவருக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்? என்ற கேள்வி பெரியளவில் எழுந்தது.
இந்தநிலையில் விஜய்யின் பிறந்தநாளையொட்டி, அவருடன் 'கேக்' வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று முன்தினம் இரவு வெளியிட்டார். அதில் 'எல்லாவற்றையும் அர்த்தமுள்ளதாய் ஆக்கிய நபருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நள்ளிரவு 12 மணிக்கு முதல் ஆளாக விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததை குறிப்பிடும் வகையில் 00:00 என்பதையும் அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதில் விஜய் அணிந்திருக்கும் சட்டையின் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. விஜய் அணிந்திருக்கும் இந்த சட்டை ‘மாங்கோ' என்ற பிராண்டை சேர்ந்தது. இந்த சட்டையின் விலை ரூ.5,500 முதல் ரூ.6 ஆயிரம் வரை இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.