சினிமா செய்திகள்

எளிமை மாறாதவர்..! கார்த்தி குறித்து சர்தார் 2 கதாநாயகி ஆஷிகா நெகிழ்ச்சி

சிறுவயதிலிருந்தே அவரது பாடல்களை கேட்டு அவரது நடனங்களை பார்த்து வளர்ந்தேன்.

கன்னட திரை உலகில் அறிமுகமான ஆஷிகா ரங்கநாத் தற்போது தமிழ், தெலுங்கு திரை உலக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சர்தார் 2 படத்தில் கார்த்தி ஜோடியாகவும், விஸ்வம்பரா படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கார்த்திக்கு சினிமா மீது மிகுந்த ஆர்வம் உண்டு. அவர் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் கட்சிதமாக செய்ய விரும்பக் கூடியவர். அவர் இவ்வளவு பெரிய நடிகராக இருந்த போதிலும் மிகவும் எளிமையாகவும் பணிவாகவும் இருப்பது எனக்கு மிகவும் பிடித்தது.

சிரஞ்சீவி உடன் நடித்தது அற்புதமான அனுபவம். சிறுவயதிலிருந்தே அவரது பாடல்களை கேட்டு அவரது நடனங்களை பார்த்து வளர்ந்தேன் இப்போது அவருடன் நடிப்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

அவர் படப்பிடிப்பு தளத்தில் பகிர்ந்து கொள்ளும் அனுபவங்கள் மிகவும் உத்வேகம் அளிக்கின்றன. விஸ்வம்பரா படப்பிடிப்பு தளத்தில் திரிஷாவையும் சந்தித்தேன் அவர் மிகவும் அழகாக இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT