‘அன்பே டயானா’ படம் ஓ.டி.டியில் வெளியாவது குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.
ஜமா புகழ் பாரி இளவழகன் - NEEK படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இணைந்து நடித்துள்ள படம் ‘அன்பே டயானா’. பாரி இளவழகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு முக்கிய வேடத்தில் நடிகை ரோஜா நடித்துள்ளார். 'குட் நைட்', 'டூரிஸ்ட் ஃபேமிலி' ஆகிய வெற்றி படங்களை தயாரித்திருந்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ‘அன்பே டயானா’ படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்று வசூலையும் குவித்தது.
இதனிடையே, ‘அன்பே டயானா’ படம் திரையரங்குகளில் வெளியாகி 25 நாள்கள் நிறைவடைந்ததை ஒட்டி தயாரிப்பாளர் யுவராஜ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இப்ப இருக்கிற சூழலில் ஒரு படம் 25 நாள் தியேட்டரில் ஓடுறதே சாதாரணமான விஷயம் இல்லை. அதுவும் புதுமுகங்களை வைத்து எடுத்த ஒரு சின்ன படம், பெரிய படங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிற நேரத்திலும், தனக்கான ஒரு இடத்தைப் பிடித்து, மக்களோட ஆதரவோடு 25 நாள் தியேட்டரில் இருக்கிறது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமான விஷயம். ஒரு பெரிய படத்தோட வெற்றி நிறைய சாதனைகளை உருவாக்கலாம். ஆனா ஒரு சின்ன படத்தோட வெற்றி, இன்னும் நிறைய பேருக்கு நம்பிக்கையை உருவாக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், ‘அன்பே டயானா’ படம் ஓ.டி.டியில் வெளியாவது குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ‘அன்பே டயானா’ படம் வருகிற 28-ந்தேதி பிரபல ஓ.டி.டி. தளமான SonyLiV-ல் ஸ்ட்ரிமீங் செய்யப்படுகிறது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் கண்டு மகிழலாம்.