தனுசு ராசியின் அதிபதி மற்றும் தொழில் ஸ்தான அதிபதியான குரு பகவான் 2.6.2026 ராசிக்கு எட்டாம் இடமான அஷ்டமஸ்தானத்தில் உச்சம் பெறப்போகிறார். தனது ஐந்தாம் பார்வையால் பன்னிரண்டாம் இடமான அயன சயன ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையால் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தையும்ஒன்பதாம் பார்வையால் நான்காம் இடமான சுகஸ்தானத்தையும் பார்ப்பார்.
குருபகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு சென்றாலும் அவரது பார்வை படும் இடங்கள் தனுசு ராசியினருக்கு ஏற்றமான பலன்களை வழங்கும்.பல்வேறு விதமான அனுகூலமான பலன்கள் நடக்கும்.
தனுசு ராசிக்கு இது அர்த்தாஷ்டமச் சனியின் மற்றும் அஷ்டம குருவின் காலம் என்பதை மறக்கக்கூடாது.இந்த காலகட்டத்தில் குரு பகவான் அதிசாரமாக சிம்ம ராசிக்கு சென்று சுமார் 43 நாள் நேர் கதியிலும் 42 நாட்கள் வக்ரகதியிலும் (1.11.2026 முதல் 25.1.2027) வரை சஞ்சரிப்பார். இதனால் தனுசு ராசியினருக்கு ஏற்படக்கூடிய பலன்களை பார்க்கலாம்.
அஷ்டம குருவின் பொதுவான பலன்கள்
பொதுவாக தன கிரகங்கள் அஷ்டமஸ்தானத்தில் நின்றால் அதன் சம சப்தம பார்வை தன ஸ்தானத்தில் பதியும். தற்போது ராசி அதிபதி குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் உச்சம் பெற்று தனஸ்தானத்தை பார்ப்பது தனுசு ராசியினருக்கு பொருளாதார ரீதியான உயர்வை ஏற்படுத்தும்.உங்கள் வாக்கு தெய்வ வாக்காக மதிக்கப்படும்.பணமே ஒருவரின் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளது.
தற்போது பணபலம் உங்களுக்கு இருப்பதால்உற்றார் உறவுகளின் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். நல்ல வாழ்வியல் முன்னேற்றம் கிடைக்கும். எதிர்காலம் பற்றிய பய உணர்வு அகலும். வேலைக்காக இடம் விட்டு இடம் அல்லது ஊர் விட்டு ஊர் மாற நேரும். வீட்டிலும், வெளி இடத்திலும் உங்களை ஓரம் கட்டியவர்கள் இனிமேல் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
மதிப்பு, மரியாதை, செல்வாக்கு அந்தஸ்து எல்லாம் உயரும்.இந்த குருப்யெர்ச்சியால் வாழ்க்கையில் உள்ள அனைத்து இடர்பாடுகளும் நீங்கி நிம்மதி பெறும் சாதகமான நேரம் எனலாம்.அதிர்ஷ்டக் குறைபாடு அகலும். அதிர்ஷ்டம் நீங்கள் இருக்கும் இடம் தேடி வரும்.
ஐந்தாம் பார்வை பலன்கள்
குருவின் ஐந்தாம் பார்வை பன்னிரெண்டாம் இடமான அயன சயன விரய ஸ்தானத்தில் பதிகிறது.குடும்பத்தில் மங்களகரமான சுப விசேஷங்கள் நடக்கும். எந்த ஒரு காரியத்திலும் துணிந்து செயல்பட்டு வெற்றி பெறும் தைரியம் உண்டாகும்.அதனால் சுப விரயங்களும் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு வேலை கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. அயல்நாட்டு குடியுரிமை கிடைக்கும். பாஸ்போர்ட் விசா சார்ந்த சர்ச்சைகள் சீராகும்.வெளியூர் வெளிநாடு செல்லுவதில் நிலவிய தடை தாமதங்கள் அகலும்.
ஒரு மனிதன் வாழ்க்கையில் நல்ல பலன்களை அனுபவிக்க சுமாரான பலன்கள் நடந்தாலே போதும் இப்போது குரு பகவான் உங்களுக்கு சூப்பரான சில நல்ல பலன்களை வழங்குவதால் உங்களை துரத்திய அசிங்கம் அவமானம் அதிர்ஷ்டக் குறைபாடு இருந்த இடம் தெரியாது.உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு நல்ல சிகிச்சை கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து அதற்கு தேவையான நிதி உதவி கிடைக்கும்.முறையான திட்டமிடுதல் உங்களை சிறப்பாக வழி நடத்தும்.
ஏழாம் பார்வை பலன்கள்
குருவின் ஏழாம் பார்வை தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் பதிகிறது.எதிர்பாராத தன லாபம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வீடு மாற்றம், வேலை மாற்றம் என விரும்பத் தகுந்த மாற்றங்கள் ஏற்படும்.
உடன் பிறந்த சகோதர, சகோதரிகளால் சகாயங்கள் உண்டாகும்.தொழில், உத்தியோகம், திருமணம், குழந்தை, வீடு வாகன யோகம் போன்ற அனைத்து விதமான பாக்கியங்களும் உண்டாகும். பிள்ளைகளின் சுப காரியங்கள் கோலாகலமாக நடைபெறும்.கூட்டுத் தொழிலால் ஆதாயம் கூடும். தொழில் பங்காளிகளுடன் ஏற்பட்ட ஈகோ தணியும்.மன வலிமை அதிகரிக்கும்.
பூர்வீகச் சொத்து, தாய்வழிச் சொத்து போன்றவற்றில் பாகப் பிரிவினை நடக்கும். அதிர்ஷ்டம், தொழில் மூலம் பணவரவு, லாபம் கிடைக்கும். வராக்கடன்கள் வசூலாகும்.கடன் சுமை குறையும். வாக்கு வன்மையால் பண பலத்தால் விரும்பியதை சாதித்துக் கொள்வீர்கள். துக்கம் துயரம் சங்கடங்கள் விலகும்.உங்கள் முன்னேற்றம் கண்டு உறவினர்கள் ஆச்சரியப்படுவார்கள். படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும்.
ஒன்பதாம் பார்வை பலன்கள்
குருவின் ஒன்பதாம் பார்வை நான்காம் இடமான சுக ஸ்தானத்தில் பதிகிறது. உங்களின் முயற்சிகள் பலிதமாகும். உடலிலும் மனதிலும் தைரியம் தெம்பு பிறக்கும். மூளை பலம் தான் மூலதனம் என புதிய சிந்தனைகளால் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வீர்கள்.பள்ளி கல்லூரி மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும். கல்வி தடை ஏற்பட்ட மாணவர்கள் மீண்டும் படிப்பைத் தொடர வாய்புகள் உள்ளது. அன்பும், பொறுமையும், நிதானமும் கல்வியில் உள்ள பற்றும் உங்கள் எதிர்கால வாழ்க்கையை வளமாக்கும்.
மண், மனை, பூமி,வாகனம் வாங்குவதில் ஆர்வம் இருக்கும். அரசிடமிருந்து இலவச வீடு, வீட்டு மனை அல்லது வீடு கட்டத் தேவையான நிதியுதவி கிடைக்கும்.வெகு சிலருக்கு விபரீத ராஜயோகமாக உயில் சொத்து அதிர்ஷ்ட பணம் கிடைக்க வாய்ப்வுள்ளது.தாய், தந்தை,குடும்ப உறவுகளின் ஆசைகளை, தேவைகளை, விருப்பங்களைநிறைவு செய்து உங்கள் கடமையைபூர்த்தி செய்வீர்கள். எதிர் பாலினத்தவரிடம் விலகி இருப்பது நல்லது.
புனர்பூச நட்சத்திர சஞ்சார பலன்கள்
(2.6.2026 முதல் 18.6.2026 வரை)
தனுசு ராசியின் அதிபதி மற்றும் சுகஸ்தான அதிபதியான குருபகவான் தனது சுய நட்சத்திரமான புனர்பூசத்தில்சஞ்சரிக்கும் காலத்தில் கடந்த காலத்தில் நடந்த கருத்து வேறுபாடு மற்றும் மனக் கவலைகள் மறைந்து தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். கல்வி நிறுவனங்கள், தர்மஸ்தாபனங்கள், வழிபாட்டு ஸ்தலங்களுக்கு உதவி செய்து பாக்கிய பலனை அதிகரிக்க முயல்வீர்கள்.
பூசம் நட்சத்திர சஞ்சார பலன்கள்
(19.6.2026 முதல் 19.8.2026) வரை
தனுசு ராசிக்கு தனாதிபதி மற்றும் சகாய ஸ்தான அதிபதியான சனிபகவானின் பூசம் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில்இதுவரை வேலையின்மையால் அவதிப்பட்டவர்களுக்கு அரசு, தனியார் துறையில் விரும்பிய வேலை கிடைக்கும். உத்தியோக உயர்வை எதிர் பார்த்தவர்களுக்கு விரும்பிய பதவி உயர்வு, ஊதிய உயர்வு .அரியர்ஸ் சம்பளம் கிடைக்கும். உழைத்த உழைப்பிற்கு கைமேல் பலன் கிடைக்கும்.
ஆயில்யம் நட்சத்திர சஞ்சார பலன்கள் (20.8.2026 முதல் 31.10.2026 வரை மற்றும் 15.4.2027 முதல் 26.6.2027 வரை)
தனுசு ராசிக்கு 7,10ம் அதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலம்திருமண தடை அகலும். புதிய கூட்டுத் தொழில் வாய்ப்புகள் தேடி வரும்.கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்து தனிக் குடித்தனம் செல்லலாம்.அரசியல் ஈடுபாடு உடையவர்களுக்கு கவுரவப்பதவிகளும் பொறுப்புகளும் தேடி வரும். மறு திருமணம் முயற்சி வெற்றி தந்து மறுவாழ்வு கிடைக்கும்.புத்திரப் பிராப்த்தத்தில் நிலவிய தடை தாமதங்கள் அகலும்.சிலருக்கு இரண்டாவது குழந்தை பிறக்கும்.
26.1.2027 முதல் 13.4.2027 வரை வக்ரகதியில் ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் நாட்களில் குருவும் கேதுவும் இணைந்து சஞ்சரிப்பதால்திருமணமான தம்பதிகள் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.போட்டி, பொறாமை, எதிர்ப்பு, இடையூறு போன்ற பிரச்சனைகளை சந்தித்தாலும் முடிவில் வெற்றி உங்களுக்கே கிடைக்கும். பிள்ளைகளின் அன்பு ஆதரவால் எதிர்பாராத நன்மைகள் நடக்கும்.
மகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்
(1.11.2026 முதல் 13.12.2026 வரை)
அதிசாரமாக சிம்ம ராசிக்கு சென்று நேர்கதியில் சஞ்சரிக்கும் குருபகவான் சில நாட்கள் கேதுவுடன் இணை வதால் பூர்வ புண்ணிய பாக்கிய பலத்தால் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். கூப்பிட்ட குரலுக்கு குலதெய்வம் ஓடி வந்து நிற்கும். புண்ணிய காரியங்களுக்கு பொருள் உதவி செய்வீர்கள். புகழ் அந்தஸ்து, கவுரவம் உயரும்.புதிய பொறுப்புகளும் தலைமைப் பதவிகளும் தேடி வரும்.பிள்ளைகளுக்கு சுப காரியம் செய்து மகிழ்வீர்கள்.
14.12.2026 முதல் 25.1.2027 வரை சிம்ம ராசியில் வக்கிர கதியில் குருபகவான் சஞ்சரிக்கும் காலமாகும்.
தெய்வ நம்பிக்கை குறையும். முக்கிய பணிகளில் தடை தாம தங்கள் ஏற்படலாம்.சிலர் ஆயில் காப்பீடு ஹெல்த் இன்சூரன்ஸ் போன்ற பாலிசிகள் எடுப்பார்கள். வாழ்க்கையை பாதிக்கும் பெரிய முக்கிய முடிவுகளை பெற்றோர்கள் பெரியோர்களின் ஆலோசனையின் பேரில் செய் வது நல்லது.தொழில் உத்தி யோக ரீதியான மாற்றங்களை தவிர்க்க வேண்டும். யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது.
பரிகாரம்
ஜென்ம நட்சத்திர நாளில் வயது முதிர்ந்தவர்களின் தேவையறிந்து உதவ பாக்கிய பலம் பெருகும். வியாழக்கிழமை ஆலங்குடி சென்று குரு பகவானை தரிசித்து வர அஷ்டமகுருவால் அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406