மிதுனம் வார ராசிபலன் 
மிதுனம் - வார பலன்கள்

மிதுனம்- 2026 வார ராசிபலன் 5.7.2026 முதல் 11.7.2026 வரை

பூர்வீகச் சொத்தை பிரிப்பதில் இருந்து வந்து சர்ச்சைகள் அதிகரிக்கும்.

மிதுனம்

பொறுமையோடு செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி புதன் வக்ரகதியில் ராசிக்குள் நுழைகிறார். கொடுக்கல் வாங்கல் மற்றும் பணப்பரிவர்த்தனையில் கவனமாக இருக்க வேண்டும்.எனினும் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால் பெரிய பாதகங்கள் ஏற்படாது என்பதை உறுதியாக கூறலாம். சிலர் உழைப்பை நம்பாமல் அதிர்ஷ்டத்தை நோக்கி பயணிப்பார்கள். பூர்வீகச் சொத்தை பிரிப்பதில் இருந்து வந்து சர்ச்சைகள் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது. அரசியல் பிரமுகர்கள், அரசாங்க ஊழியர்களுக்கு தனிமை, அடிமை, சிறை தண்டனை, நோயால் படுத்த படுக்கையாக கிடப்பது போன்ற பலன் நடக்கும். முதலீட்டாளர்கள் கவனமாக செயல்பட வேண்டும். புதிய ஒப்பந்தத்திற்கு கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவு கூடும். மருமகனால் மன உளைச்சல் அதிகரிக்கும்.விவாகரத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.முதல் திருமணம் விவாகரத்து பெற்றவர்களுக்கு மறு வாழ்க்கை வளம் பெறும். புதிய முயற்சிகளையும் வெளியூர் பயணங்களையும் ஒத்தி வைக்கவும். புதன்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406