search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்கம்"

    • அட்சய திருதியை முன்னிட்டு நேற்று 3 முறை தங்கம் விலை மாற்றம் செய்யப்பட்டது.
    • தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    பொதுவாக தங்கம் விலையில் நாளொன்றுக்கு 2 முறை மாற்றம் இருக்கும். அதன்படி, காலை மற்றும் மாலை என இருவேளைகளில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படும். ஆனால், அட்சய திருதியை முன்னிட்டு நேற்று 3 முறை தங்கம் விலை மாற்றம் செய்யப்பட்டது.

    நேற்றுமுன்தினம் மாலை நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 615-க்கும், ஒரு பவுன் ரூ.52 ஆயிரத்து 920-க்கும் விற்பனையானது. ஆனால், அட்சய திருதியை தொடங்கியதும் நேற்று அதிகாலை 5 மணிக்கு மேல் ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 660-க்கும், ஒரு பவுன் ரூ.53 ஆயிரத்து 280-க்கும் விற்பனையானது.

    காலை 8 மணியளவில், தங்கம் விலை ஏற்றம் கண்டு, ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 705-க்கும், ஒரு பவுன் ரூ.53 ஆயிரத்து 640-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த சூழலில், நேற்று மாலை 4 மணியளவில் தங்கம் விலை 3-வது முறையாக மாற்றம் செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 770-க்கும், ஒரு பவுன் ரூ.54 ஆயிரத்து 160-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இப்படி நேற்று ஒரே நாளில், கிராம் ஒன்றுக்கு ரூ.155-ம், பவுனுக்கு ரூ.1,240-ம் தங்கம் விலை உயர்ந்தது.

    இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 54 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து 90 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

    • பெரும்பாலான நகைகடைகளில் தங்க நாணயம் விற்பனைக்கென தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது.
    • கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில், ரூ.11 ஆயிரம் கோடி வரையில் தங்க நகைகள் விற்பனை இருந்தது.

    சென்னை:

    சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியையே, 'அட்சய' திருதியை என்று அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். அனைத்து நலன்களையும் குறைவில்லாமல் அள்ளிக்கொடுக்கும் இந்த திருதியை நாளன்று, வாங்கும் பொருள் இல்லங்களில் அளவில்லாமல் சேரும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை.

    அந்த வகையில், அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்று பொதுமக்கள் நம்புகிறார்கள். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை நாளில் மக்கள் தங்க நகைகளை வாங்கி மகிழ்கின்றனர். இந்த ஆண்டு, அட்சய திருதியை நேற்று அதிகாலை 4.56 மணிக்கு தொடங்கி, இன்று (சனிக்கிழமை) மதியம் 2.50 மணியுடன் முடிவடைகிறது.

    அட்சய திருதியை முன்னிட்டு, நகைகடைகள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகளும் அறிவித்தன. பவுனுக்கு ஆயிரம் ரூபாய் தள்ளுபடி, பழைய நகைகளுக்கு கூடுதல் விலை, செய்கூலி, சேதாரம் தள்ளுபடி என சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

    கூட்டம் அதிகம் குவியும் என்பதால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான நகைகடைகள் நேற்று அதிகாலை 6 மணிக்கே திறக்கப்பட்டன. நேற்று காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், 4.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில், நகைகடைகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

    அதேபோல், ஜி.ஆர்.டி. ஜூவல்லரி, ஜோயாலுக்காஸ், மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ், பீமா கோல்ட் ஜூவல்லரி, பிரின்ஸ் ஜூவல்லரி, கல்யாண் ஜூவல்லர்ஸ், போத்தீஸ் ஸ்வர்ண மஹால் ஆகிய கடைகளில் அட்சய திருதியை முன்னிட்டு நேற்று காலை முதல் இரவு வரை கூட்டம் அலைமோதியது.


    நகைகடைகளில் குறிப்பிட்ட நேரத்தில், நகைகளை வாங்குவதற்கு, ஒரு வாரத்துக்கு முன்பே, 75 சதவீத தொகை செலுத்தி பலர் முன்பதிவு செய்து, நகைகளை நல்ல நேரத்தில் வாங்கினர். விதவிதமான டிசைன்களில் நகைகள் அட்சய திருதியை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. பெண்கள் அட்சய திருதியை நாளில் தங்களுக்கு பிடித்த தங்கம் மற்றும் வைரம், வெள்ளி நகைகளை ஆர்வத்துடன் தேர்வு செய்து மகிழ்ச்சியுடன் அணிந்துக்கொண்டனர்.

    பெரும்பாலான நகைகடைகளில் தங்க நாணயம் விற்பனைக்கென தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில், ரூ.11 ஆயிரம் கோடி வரையில் தங்க நகைகள் விற்பனை இருந்தது. நடப்பாண்டு, விற்பனை அதிகரித்துள்ளதாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    அட்சய திருதியை விற்பனை தொடர்பாக தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:-

    சென்னையில் உள்ள 5 ஆயிரம் நகைக்கடைகள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 45 ஆயிரத்துக்கும் அதிகமான சிறிய மற்றும் பெரிய நகைக்கடைகளில் நேற்று கூட்டம் அதிகம் காணப்பட்டது.

    தேர்தல் நடைமுறை அமலில் இருந்தபோது, பொதுமக்களால் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக வெளியே கொண்டு செல்ல முடியவில்லை. தற்போது, அந்த நடைமுறை விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால், அட்சய திருதி நாளில் மக்கள் அதிகளவு நகைகளை வாங்க குவிந்தனர். கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் ரூ.11 ஆயிரம் கோடி வரையில் தங்கம் உள்பட நகைகள் விற்பனை இருந்தது. ஆனால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அட்சய திருதியை நாளில், 25 முதல் 30 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதன்மூலம், நேற்று ஒரே நாளில் ரூ.14 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக தங்கம் உள்பட பல்வேறு நகைகள் விற்பனை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    • நகைக்கடைகளில் தங்க நகைகள் வாங்குவதற்காக இன்று காலையிலேயே ஏராளமான பெண்கள் குவிந்தனர்.
    • தங்களுக்கு பிடித்த நகைகளை பெண்கள் ஆர்வமுடன் வாங்கினார்கள்.

    சென்னை:

    அட்சய திரிதியை அன்று தங்க நகை வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும், அடிக்கடி தொடர்ந்து தங்கம் வாங்கி குவிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது ஆண்டாண்டு காலமாக மக்களிடையே உள்ள நம்பிக்கையாகும். இதனால் அள்ள அள்ளக் குறையாத செல்வ வளங்களை வாரித்தரும் அட்சய திரிதியை அன்று சிறிய நகையையாவது வாங்கிவிட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

    இதனால், அட்சய திரிதியை நாளான இன்று நகைக்கடைகள் காலை 6 மணிக்கே திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியது. சென்னை தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை, குரோம்பேட்டை, பாடி, அண்ணாநகர், தாம்பரம் ஆகிய இடங்களில் உள்ள நகைக்கடைகளில் தங்க நகைகள் வாங்குவதற்காக இன்று காலையிலேயே ஏராளமான பெண்கள் குவிந்தனர். அவர்கள் தங்களுக்கு பிடித்த நகைகளை ஆர்வமுடன் வாங்கினார்கள்.

    முன்னதாக, அட்சய திரிதியையொட்டி தங்கம் விலை இன்று காலையிலேயே 2 முறை அதிகரித்தது. கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்தது.

    இந்நிலையில், இன்று 3-வது முறையாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. தற்போது சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.54,160-க்கும் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,770-க்கும் விற்பனையாகிறது. மொத்தத்தில் இன்று மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,240 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சென்னையில் அட்சய திரிதியைக்காக நகைக்கடைகள் இன்று காலை 6 மணிக்கே திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியது.
    • பல நகைக்கடைகள் அட்சய திரிதியைக்காக போட்டி போட்டு சலுகைகளை அறிவித்திருந்தன.

    சென்னை:

    அட்சய திரிதியை அன்று தங்க நகை வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும், அடிக்கடி தொடர்ந்து தங்கம் வாங்கி குவிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது ஆண்டாண்டு காலமாக மக்களிடையே உள்ள நம்பிக்கையாகும். இதனால் அள்ள அள்ளக் குறையாத செல்வ வளங்களை வாரித்தரும் அட்சய திரிதியை அன்று சிறிய நகையையாவது வாங்கிவிட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

    தங்க நகை வாங்க முடியாதவர்கள் கையில் இருக்கும் சேமிப்பை வைத்து ஏதாவது சிறிய தங்க நாணயத்தையாவது வாங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனால் அட்சய திரிதியைக்கு நகைக்கடைகளில் தங்கம் அமோகமாக விற்பனையாகிறது.

    இந்த ஆண்டில் இன்று (வெள்ளிக்கிழமை) அட்சய திரிதியை தினம் ஆகும். அட்சய திரிதியை இன்று காலை 6.33 மணிக்கு தொடங்கி நாளை (சனிக்கிழமை) அதிகாலை 4.56 மணி வரை உள்ளது. இதையொட்டி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள நகைக்கடைகளில் தங்க நகைகள் விற்பனை அமோகமாக நடந்தது.

    சென்னையில் அட்சய திரிதியைக்காக நகைக்கடைகள் இன்று காலை 6 மணிக்கே திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியது. சென்னை தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை, குரோம்பேட்டை, பாடி, அண்ணாநகர், தாம்பரம் ஆகிய இடங்களில் உள்ள நகைக்கடைகளில் தங்க நகைகள் வாங்குவதற்காக இன்று காலையிலேயே ஏராளமான பெண்கள் குவிந்தனர். அவர்கள் தங்களுக்கு பிடித்த நகைகளை ஆர்வமுடன் வாங்கினார்கள்.

    மேலும் நகைக்கடைகளில் இன்று கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்பதால் பெரும்பாலானோர் கடந்த 15 நாட்களாகவே நகைக்கடைகளுக்கு சென்று தங்களுக்கு பிடித்த நகைகளை தேர்வு செய்து 25 சதவீத பணம் செலுத்தி முன்பதிவு செய்து வைத்திருந்தனர். அவர்கள் அட்சய திரிதியையான இன்று நகைக்கடைகளுக்கு சென்று மீதமுள்ள பணத்தை செலுத்தி தாங்கள் ஏற்கெனவே தேர்வு செய்து வைத்திருந்த நகைகளை வாங்கினார்கள்.

    அட்சய திரிதியையொட்டி தங்கம் விலை இன்று காலையிலேயே 2 முறை அதிகரித்தது. கிராமுக்கு ரூ.90-ம், பவுனுக்கு ரூ.720-ம் கூடியது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.53,640-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஏற்கெனவே முன்பதிவு செய்து வைத்திருந்த வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்த அன்று இருந்த குறைந்த விலைக்கே தங்கத்தை வாங்கி மகிழ்ந்தனர். முன்பதிவு செய்யாதவர்கள் இன்றைய விலைக்கு தங்கத்தை வாங்கினார்கள்.

    மேலும் பல நகைக்கடைகள் அட்சய திரிதியைக்காக போட்டி போட்டு சலுகைகளை அறிவித்திருந்தன. சில கடைகளில் தங்க நகைகள் பவுனுக்கு ரூ.2 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டது. வைர நகைகள் காரட்டுக்கு ரூ.15 ஆயிரம் வரை தள்ளுபடி, வெள்ளி கிலோவுக்கு ரூ.3 ஆயிரம் வரை தள்ளுபடி ஆகிய சலுகைகளும் வழங்கப்பட்டன. சில கடைகளில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு செய்கூலி, சேதாரத்திலும் சலுகைகள் வழங்கப்பட்டன. பழைய தங்கத்தை இன்றைய மார்க்கெட் விலைக்கே மாற்றிக்கொள்ளும் சலுகைகளும் வழங்கப்பட்டன. இந்த சலுகைகளை பெற்று வாடிக்கையாளர்கள் நகை வாங்கினார்கள்.

    தங்க நாணயம் வாங்க சென்ற வாடிக்கையாளர்களுக்கு நகைக்கடைகளில் தனியாக கவுண்டர்கள் அமைக்கப்பட்டு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அவர்கள் வரிசையில் சென்று தங்க நாணயங்களை வாங்கிச் சென்றனர். அட்சய திரிதியை விற்பனைக்காக சென்னையில் உள்ள பெரிய நகைக்கடைகள் எல்லாமே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதனால் நகைக்கடைகள் எல்லாமே விளக்கொளியில் ஜொலித்தன.


    தமிழகம் முழுவதும் சுமார் 45 ஆயிரம் சிறிய மற்றும் பெரிய நகைக்கடைகள் உள்ளன. சென்னையில் மட்டும் 5 ஆயிரம் நகைக்கடைகள் உள்ளன. அனைத்து நகைக்கடைகளிலுமே இன்று தங்கம் விற்பனை மிகவும் அமோகமாக நடந்தது. வாடிக்கையாளர்கள் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. தி.நகர் உள்ளிட்ட சென்னையில் உள்ள முக்கியமான வணிக பகுதிகள் தங்கம் வாங்க வந்த வாடிக்கையாளர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. இதனால் நகைக்கடைகள் அதிகம் உள்ள இடங்களில் சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    நகைக்கடைக்காரர்கள் விற்பனையை அதிகரிப்பதற்காக அட்சய திரிதியை சலுகைகளை இன்று முதல் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்களுக்கு வழங்குகிறார்கள். இதனால் இந்த 3 நாட்களும் தங்கம் விற்பனை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அட்சய திரிதியைக்காக நகை வாங்க விரும்புபவர்கள் இன்று இரவு வரை நகை வாங்க வருவார்கள் என்பதால் இன்று நள்ளிரவு வரை நகைக்கடைகளை திறந்து வைத்து நகைகளை விற்பனை செய்யவும் நகைக்கடைக்காரர்கள் முடிவு செய்துள்ளனர்.

    மேலும் சென்னையில் சில நகைக்கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களின் நலன் கருதி தங்க நகைகள் வாங்க விரும்புபவர்களுக்கு வீடுகளுக்கு வாகன வசதியையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.

    அட்சய திரிதியை விற்பனை குறித்து சென்னையை சேர்ந்த நகைக்கடை வியாபாரிகள் கூறியதாவது:-

    அட்சய திரிதியையொட்டி இன்று காலை 6 மணிக்கே நகைக்கடைகளை திறந்து வியாபாரம் செய்து வருகிறோம். இன்று காலையில் இருந்தே நகை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் வரத் தொடங்கி விட்டார்கள். தொடர்ந்து நேரம் செல்லச்செல்ல வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

    வாடிக்கையாளர்கள் பொறுமையாக நகை வாங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளோம். வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்.


    வாடிக்கையாளர்களின் கூட்டத்தை பொறுத்து இன்று நள்ளிரவு வரை கடைகளை திறந்து வியாபாரம் செய்ய முடிவு செய்து உள்ளோம். இந்த ஆண்டு அட்சய திரிதியைக்காக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு புதிய டிசைன்களில் நகைகள் விற்பனைக்கு வந்து உள்ளன. வைர நகைகளும் புதிய டிசைன்களில் அதிக அளவில் உள்ளன.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்த போது பொதுமக்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால் அப்போது நகை விற்பனை பாதிக்கப்பட்டது. தற்போது சென்னை நகருக்குள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்ல தடை இல்லை என்பதால் தேர்தல் நேரத்தில் நகை வாங்குவதை தவிர்த்தவர்கள் இப்போது நகை வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தங்க நகை விற்பனை 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இரவு நேரத்தில் நகை வாங்க வரும் வாடிக்கையாளர்களை பாதுகாப்பாக அவர்களின் இல்லத்திற்கே கொண்டு சென்று விட வாகன ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கடைகளில் கூடுதலாக பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு அட்சய திரிதியை அன்று 20 டன் அளவுக்கு தங்கம் விற்பனையானது. தமிழகத்தில் சுமார் ரூ.11 ஆயிரம் கோடி அளவுக்கு நகை விற்பனையானது. இந்த ஆண்டு சுமார் ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்க நகைகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
    • கிராமுக்கு ரூ.1.30 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூ.90-ஆகவும் பார் வெள்ளி ரூ.90,000ஆகவும் விற்பனையாகிறது.

    சென்னை:

    சித்திரை மாதத்தின் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை அட்சய திருதியை என்று கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் உள்ளது.

    இதனால் தங்கம் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இன்று தங்கம் விலை 2-வது முறையாக உயர்ந்துள்ளது.

    காலையில் கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்த நிலையில் மீண்டும் 45 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் இன்று தங்கம் சவரன் 720 ரூபாய் அதிகரித்து ரூ.53,640-க்கும் கிராம் ரூ.6,705-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.1.30 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூ.90-ஆகவும் பார் வெள்ளி ரூ.90,000ஆகவும் விற்பனையாகிறது.

    • அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் உள்ளது.
    • அட்சய திருதியையொட்டி இன்று சென்னையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தமிழ் மாதமான சித்திரை மாதத்தின் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை அட்சய திருதியை என்று கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் உள்ளது.

    இந்த ஆண்டு அட்சய திருதியை இன்று அதிகாலை 4.17 மணிக்கு தொடங்கி 11-ந்தேதி மதியம் 2.50 மணிக்கு முடிவடைகிறது. இந்த நாளில் வாங்கப்படும் எந்த பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவே இந்த நாளில் பொதுமக்கள் தங்கத்தை வாங்குவதற்கு விரும்புகின்றனர்.

    இந்தநிலையில் அட்சய திருதியையொட்டி இன்று சென்னையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து 53 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 660 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு அதிகரித்து 88 ரூபாய் 70 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

    • வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது.
    • கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.88.50-க்கும் பார் வெள்ளி ரூ.88,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை :

    ஆபரணத்தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து விற்பனையாகி வருகிறது. இதனிடையே அக்ஷய திருதியை வருகிற 10-ந்தேதி வருகிறது. அன்றைய தினம் தங்கம் வாங்கினால் வருடம் முழுவதும் தங்கம் வாங்குவார்கள் என கூறப்படுகிறது. இதனால் பெண்கள் அக்ஷய திருதியை நாளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,640-க்கும் சவரன் ரூ. 53,120-க்கும் விற்பனையாகி வருகிறது.

    வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.88.50-க்கும் பார் வெள்ளி ரூ.88,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • அட்சயா என்ற சொல்லுக்கு ஒருபோதும் குறைவில்லாதது என்று பொருள்.
    • அட்சய திருதியை நாளில் விஷ்ணுவின் பாதங்களில் சங்கு சமர்ப்பித்து வழிபடலாம்.

    இந்த ஆண்டு அட்சய திருதியை வருகிற 10-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. புதிய வணிகம், தொழில் தொடங்குவதற்கும், தங்கம், வெள்ளி பொருட்களை வாங்குவதற்கும் முக்கியமான நாளாக கருதப்படுகிறது.

    அட்சயா என்ற சொல்லுக்கு ஒருபோதும் குறைவில்லாதது என்று பொருள். இந்த நாளில் வாங்கும் பொருட்கள் மென்மேலும் வளரும், இந்த நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. பண நெருக்கடி காரணமாக தங்கம், வெள்ளி போன்ற மதிப்புமிக்க பொருட்களை வாங்க முடியாத நிலையில் அதற்கு மாற்றாக வாங்க வேண்டிய பொருட்கள் குறித்து பார்ப்போம்.


    தானியங்கள்:

    வெண் கடுகு, அதாவது மஞ்சள் நிற கடுகு, பார்லி போன்ற தானியங்கள் அட்சய திருதியை அன்று லட்சுமி தேவியை வழிபட பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்த பொருட்களை அன்றைய தினம் வாங்குவது நல்லது. அரிசி போன்ற தானியங்கள், வளத்தின் அடையாளமாக விளங்கும் பருப்பு வகைகள், பசுமை மற்றும் ஆரோக்கியத்தின் அடையாளமான காய்கறிகள், புனிதப்பொருளான நெய் போன்றவற்றையும் வாங்கலாம்.

    சோழி:

    அட்சய திருதியை அன்று சோழி வாங்கலாம். லட்சுமி தேவியின் பாதங்களில் சோழிகளை காணிக்கை செலுத்தி வழிபடலாம். மறுநாள் அந்த சோழிகளை சிவப்பு துணியில் பொதிந்து பாதுகாப்பாக வைக்கவும். இது பொருளாதார வளர்ச்சி அடைய உறுதி செய்யும் என நம்பப்படுகிறது.


    மண்பானை:

    அட்சய திருதியை நாளில் வீட்டில் மண்பானை இருப்பது லட்சுமி தேவியை மகிழ்விக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அன்றைய தினம் மண்பானை வாங்கி வைப்பது வீட்டில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் அதிகரிக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.

    சங்கு:

    அட்சய திருதியை நாளில் விஷ்ணுவின் பாதங்களில் சங்கு சமர்ப்பித்து வழிபடலாம். அவ்வாறு செய்வதன் மூலம் விஷ்ணுவும், லட்சுமி தேவியும் மகிழ்ச்சி அடைவார்கள், வீட்டில் மகிழ்ச்சி தங்குவதும் உறுதி செய்யப்படும் என்ற கருத்தும் நிலவுகிறது.


    ஸ்ரீசக்கரம்:

    அட்சய திருதியை அன்று ஸ்ரீசக்கரம் வரைபடமும் வாங்கலாம். அதனை வீட்டின் பூஜை அறையில் வைக்க வேண்டும். இதன் மூலம் விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியின் தெய்வீக இருப்பிடம் உங்கள் வீட்டில் தங்கும் என்பது ஐதீகம்.

    • தங்கம் எட்டாக்கனியாகிவிடுமோ என்ற ஏக்கம் ஏழை மற்றும் நடுத்தர மக்களை தொற்றிக்கொண்டது.
    • வெள்ளியின் விலை குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்தோடு காணப்படுகிறது. அந்தவகையில், கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் தங்கத்தின் விலை உயர்வை கண்டும் அதிர்ச்சி அடைந்தனர். தங்கம் எட்டாக்கனியாகிவிடுமோ என்ற ஏக்கம் ஏழை மற்றும் நடுத்தர மக்களை தொற்றிக்கொண்டது.

    தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.52 ஆயிரத்து 920-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.100 குறைந்து கிராம் ரூ.6 ஆயிரத்து 615-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 52 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து 86 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

    • கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
    • கவனத்தை திசை திருப்பி கொள்ளை அடிப்பதாக தெரிய வந்துள்ளது.

    போரூர்:

    சென்னை எம்.ஜி.ஆர் நகர், குண்டலகேசி தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். மாநகர பஸ் கண்டக்டராக உள்ளார். இவரது மனைவி ராஜ லட்சுமி. இவர் கடந்த மாதம் 23ந் தேதி வெளியூரில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    பின்னர் தான் அணிந்திருந்த 18பவுன் நகைகளை கழட்டி கைப்பையில் போட்டுக் கொண்டு கோயம்பேட்டில் இருந்து மாநகர பஸ் (தடம் எண்70வி) மூலம் வீடு திரும்பினார்.

    ஜாபர்கான்பேட்டை காசி தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய ராஜலட்சுமி நகைகளுடன் தனது கைப்பை மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் நகையை சுருட்டி சென்றது தெரியவந்தது.இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அம்மு போலீஸ்காரர் விக்ரம் தலைமையிலான தனிப்படை போலீசார் கோயம்பேடு முதல் வண்டலூர் வரை உள்ள மாநகர பஸ் நிறுத்தங்களில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது நகை கொள்ளையில் ஈடுபட்டது ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த விமலா (30) என்பது தெரிந்தது. வேலூரில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விமலா கூட்ட நெரிசல் மிகுந்த பஸ்களை குறிவைத்து கொள்ளை அடிப்பவர் என்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    இவரை போன்று மேலும் பல பெண்கள் பஸ்களில் கைவரிசை காட்டுவதற்காக சென்னை மாநகருக்குள் ஊடுருவி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கூட்ட நெரிசலில் சில்லரையை சிதறிவிட்டு கவனத்தை திசை திருப்பி இந்த பெண்கள் கொள்ளை அடிப்பதாக தெரிய வந்துள்ளது.

    எம்.ஜி.ஆர். நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள விமலா வும் சில்லரையை சிதற விட்டுத்தான் நகையை அபேஸ் செய்துள்ளார்.

    இவரைப் போன்று ஆந்திராவை சேர்ந்த 6 பெண்கள் சென்னையில் ஊடுருவி இருப்பதாகவும், எனவே மாநகர பஸ்களில் பயணம் செய்யும் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    ஆந்திராவில் இருந்து ஒன்றாக புறப்பட்டு சென்னைக்கு வரும் இவர்கள் பின்னர் தனித்தனியாக பிரிந்து சென்று கைவரிசை காட்டு வார்கள். காலையில் இருந்து இரவு வரையில் கிடைப்பதை சுருட்டிக் கொண்டு ஆந்திராவுக்கு சென்று விடுவார்கள்.

    விமலாவை போன்று சென்னை மாநகர பஸ்களில் கைவரிசை காட்டிவரும் மற்ற பெண்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தங்கம் விலை கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 615 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.

    சென்னை:

    தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் நீடிக்கிறது. நேற்று முன்தினம் விலை குறைந்து, நேற்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்திருந்தது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 52 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 615 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 87 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது.
    • கிராமுக்கு 50 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.86.50-க்கும் பார் வெள்ளி ரூ.86,500-க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நேற்று சவரன் ரூ.54 ஆயிரத்திற்கு விற்பனையானது.

    இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ஒரு சவரன் ரூ.53,080-க்கும் கிராமுக்கு ரூ.115 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,635-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 50 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.86.50-க்கும் பார் வெள்ளி ரூ.86,500-க்கும் விற்பனையாகிறது.

    ×