என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • மறுநாள் 31-ந்தேதி முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும்.
    • சபரிமலையில் நடப்பு மண்டல சீசனையொட்டி கடந்த 27-ந்தேதி வரை 36 லட்சத்து 61 ஆயிரத்து 258 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந்தேதி முதல் பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வந்தது. கோவிலில் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மண்டல பூஜை நடைபெற்றது.

    மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். நாளை சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

    இதையடுத்து மறுநாள் 31-ந்தேதி முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை நடக்கிறது. அன்றைய தினம் மாலை 6.25 மணிக்கு ஐயப்ப சாமிக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து மகர ஜோதி தரிசனம் சன்னிதானத்தில் நடக்கும். சீசனையொட்டி 19-ந்தேதி வரை மட்டுமே பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படும். 20-ந்தேதி காலை 6.30 மணிக்கு பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனம் செய்வார். அத்துடன் நடை அடைக்கப்பட்டு 2025-2026 மண்டல-மகரவிளக்கு சீசன் நிறைவுபெறும்.

    திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சபரிமலையில் நடப்பு மண்டல சீசனையொட்டி கடந்த 27-ந்தேதி வரை 36 லட்சத்து 61 ஆயிரத்து 258 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு மண்டல சீசன் முடிவடைந்தபோது 32 லட்சத்து 49 ஆயிரத்து 756 பேர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்து இருந்தனர். அதாவது கடந்த சீசனை விட இந்த ஆண்டு 4 லட்சத்து 11 ஆயிரத்து 502 பக்தர்கள் கூடுதலாக தரிசனம் செய்துள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருக்குற்றாலம் திருக்குற்றால நாதர் பஞ்சமூர்த்திகளுடன் ரதோற்சவம்.
    • கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் கருடாழ்வாருக்கும் திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு மார்கழி-14 (திங்கட்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : தசமி பின்னிரவு 3.50 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம் : அசுவினி பின்னிரவு 2.40 மணி வரை பிறகு பரணி

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் சிவன் கோவில்களில் அபிஷேகம்

    இன்று கெர்ப்போட்டம் ஆரம்பம். திருக்குற்றாலம் திருக்குற்றால நாதர் பஞ்சமூர்த்திகளுடன் ரதோற்சவம். சிதம்பரம் ஸ்ரீ சிவபெருமான் ரிஷப வாகனத்தில் பவனி. வீரவநல்லூர் ஸ்ரீ சுவாமி ரிஷப வாகனத்திலும், இரவு ஸ்ரீசுவாமி இந்திர வாகனத்திலும் வீதி உலா. ஆவுடையார் கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் ஊர்துவத் தாண்டவக் காட்சி, இரவு யானை வாகனத்தில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு திருமஞ்சனம். கீழ்த்திருப்பதியில் ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கும், நத்தம் ஸ்ரீவிஜயாசனப் பெருமாளுக்கும், கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் கருடாழ்வாருக்கும் திருமஞ்சனம்.

    திருமயிலை ஸ்ரீகற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட் நகர் ஸ்ரீ அராளகேசி அம்மன் சமேத ஸ்ரீரத்தின கிரீஸ்வரர், திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தர குசாம்பிகை சமேத ஸ்ரீமகாலிங்க சுவாமி கோவில்களில் சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவல்லி அம்மன் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு பாலாபிஷேகம். திருச்சேறை ஸ்ரீசாரநாதர் புறப்பாடு. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஊக்கம்

    ரிஷபம்-அமைதி

    மிதுனம்-ஈகை

    கடகம்-ஓய்வு

    சிம்மம்-லாபம்

    கன்னி-ஜெயம்

    துலாம்- திடம்

    விருச்சிகம்-மாற்றம்

    தனுசு- போட்டி

    மகரம்-வரவு

    கும்பம்-ஆசை

    மீனம்-உறுதி

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். எந்தக் காரியத்தையும் எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    ரிஷபம்

    சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். நிச்சயிக்கப்பட்ட காரியங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். மதியத்திற்கு மேல் மன உளைச்சல் அதிகரிக்கும். பணியாளர்களால் தொல்லை உண்டு.

    மிதுனம்

    தேவைகள் பூர்த்தியாகும் நாள். திடீர் மாற்றம் ஏற்படும். தொழிலில் ஏட்டிக்குப் போட்டியாக இருந்தவர்கள் இனி ஒத்து வருவர். கடன் சுமை குறையும். பயணங்களால் விரயம் உண்டு.

    கடகம்

    விருப்பங்கள் நிறைவேறும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். எதிர்பார்த்தபடியே தனலாபம் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் உயரும்.

    சிம்மம்

    இன்பங்கள் கூடும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். கரைந்த சேமிப்பை ஈடு கட்டுவீர்கள். அயல் நாட்டிலிருந்து ஆதாயம் தரும் தகவல் வரலாம்.

    கன்னி

    விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். பண வரவில் தாமதங்கள் ஏற்படும். தொழிலுக்காக எடுத்த முயற்சியில் தொல்லைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் உண்டு.

    துலாம்

    பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும் நாள். நல்ல செய்திகள் இல்லம் தேடி வரும். உங்களின் வைப்பு நிதி உயரும். திட்டமிட்ட காரியம் ஒன்றில் மாற்றம் செய்வீர்கள். உத்தியோக உயர்வு உண்டு.

    விருச்சிகம்

    நினைத்தது நிறைவேறும் நாள். வருமானம் திருப்தி தரும். உத்தியோகம் சம்பந்தமாக நல்ல தகவல் வந்து சேரும். பிறர் உங்களிடம் கொடுத்த பொறுப்புகளை முடித்துக் கொடுப்பீர்கள்.

    தனுசு

    அருகில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். உறவினர் பகை அகலும். முடங்கிக் கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.

    மகரம்

    வியக்கும் செய்தி வீடு வந்து சேரும் நாள். உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு உறவினர்கள் ஆச்சரியப்படுவர். பழுதான வீடுகளைப் பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும்.

    கும்பம்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணை புரிவர். போன்வழித் தகவல் பொருள் வரவிற்கு வழிவகுக்கும்.

    மீனம்

    வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். மாற்று இனத்தவர்களின் உதவியால் தொழில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

    • ரிஷபம் நிதானத்துடன் செயல்பட வேண்டிய வாரம்.
    • கடகம் தடை, தாமதங்கள் விலகும் வாரம்.

    மேஷம்

    சகல சவுபாக்கியங்களும் உண்டாகும் வாரம்.ராசிக்கு 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் உள்ள சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதனுக்கு சனி மற்றும் குருவின் பார்வை உள்ளது. இழந்த அனைத்து இன்பங்களையும் மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை உருவாகும்.தொழில் வளர்ச்சி அபரிமித மாக இருக்கும். லாபம் அதிகரிக்கும். வேலை பார்த்து கொண்டே உபதொழில் செய்து லாபம் ஈட்டும் மார்க்கம் தென்படும். தொழில் உத்தியோகத்தில் இருந்த பாதிப்புகள் விலகும்.வேலையில் பதவி உயர்வுகளை அடையக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. நெருக்கடியாக இருந்த பிரச்சினைகள் நீங்கும். சாமர்த்தியம் அதிகமாகும். பங்கு வர்த்தகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பிள்ளைகளின் திருமணம், குழந்தை பாக்கியம், உத்தியோக, தொழில் அனுக்கிர கம் மன நிம்மதியை அதிகரிக்கும். மனதை மகிழ்விக் கும் நல்ல சம்பவங்கள் நடக்கும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம். சிலருக்கு நிலம், வீடு போன்ற சொத்துச் சேர்க்கை உண்டாகும். கை, கால், மூட்டு வலியால் ஏற்பட்ட அவதியில் இருந்து விடுதலை உண்டாகும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். நடராஜருக்கு இளநீர் அபிஷேகம் செய்து வழிபடவும்.

    ரிஷபம்

    நிதானத்துடன் செயல்பட வேண்டிய வாரம்.ராசிக்கு சனியின் 3ம் பார்வை உள்ளது. தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு வக்ரமாக இருப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள் மனதை வருத்தும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களது செய்கை கோபத்தை அதிகரித்தாலும் நிதானத்தை கடைபிடித்தால் தேவையற்ற பிரச்சினைகளைத் தடுக்கலாம். தொழில், உத்தியோக ரீதியான பாதிப்பு எதுவும் இருக்காது. தொழில் கூட்டாளி களிடம் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. நல்ல சொந்த வீட்டிற்குச் செல்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடை பெறும். ஆண், பெண்களுக்கு திருமண வாய்ப்பு தேடி வரும். குழந்தை பாக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் வைத்தியத்தில் சீராகும். வீட்டுக்கடன் குறைந்த வட்டியில் கிடைக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். சொத்து தொடர்பான முக்கிய முடிவு, பத்திரப்பதிவுகளை ஓரிரு வாரங்களுக்கு தவிர்க்க வும். நடராஜருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட எல்லா விதமான பிரச்சினைகளும் சீராகும்.

    மிதுனம்

    தடைபட்ட காரியங்கள் துரிதமாகும் வாரம். ராசி அதிபதி புதன் குருவுடன் பரிவர்த்தனை பெற்று சனி பார்வையில் இருக்கிறார். வாழ்க்கையை நடத்து வதில் இருந்த சிரமங்கள் உங்களுடைய முயற்சியால் சீராகும். பயம் என்பதே இருக்காது. தைரியசாலியாக இருப் பீர்கள். கடுமையாக உழைப்பீர்கள். குடும்ப சிக்கல்கள், மற்றும் சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள். கடந்த கால கடன்களைத் தீர்த்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.ஒரே நேரத்தில் பலவிதமான வாய்ப்புகள் வந்து சேரும். பணம் சம்பாதிக்கும் சிந்தனையுடனே இருப்பீர் கள். பண வரவில் முன்னேற்றம் இருக் கும். குடும்ப உறவுகளின் அனுசரனை யால் அனைத்து பிரச்சினைகளும் கானல் நீராக மறையும். பருவ வயதினர் மண நாளை எண்ணலாம். மனதும், உடலும் சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு குறையும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைத்து குடும்பத்துடன் இணையும் வாய்ப்புள்ளது. உடன் பிறந்தவர்கள், பங்காளிகளிடம் அனுசரித்துச் சென்றால் பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகள் தீரும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலை அதிகரிக்கும். நடராஜருக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடவும்.

    கடகம்

    தடை, தாமதங்கள் விலகும் வாரம். ராசி அதிபதி சந்திரன் 9,10,11-ம் இடங்களில் சஞ்சரிப்பதால் பிறர் ஆச்சரியப்படும் வகையில் அன்றாட பணிகளை திறம்பட செயல்படுத்த முடியும். தொழிலில் கணிசமான லாபம் கிடைக்கும்.வேலை செய்யும் இடத்தில் சில அசவுகரியங்கள் அதிகரித்தாலும் அதை பொருட்டாக மதிக்காமல் முன்னேறுவீர்கள். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமல் இழுத்தடித்த வர்கள் வீடு தேடி வந்து பணத்தை கொடுப்பார்கள்.அதிக முதலீட்டில் சொந்த தொழில் செய்பவர்கள் நிதானந்துடன் செயல்பட வேண்டும். விவாகரத்து வரைச் சென்ற வழக்குகள் சுமூகமாகும். சுய ஜாதக ரீதியான திருமணத் தடை அகலும். மறு திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். தேவை இல்லாமல் குடும்பத்தில் நடந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தம்பதிகள் அமைதி கடை பிடித்தால் ஓரிரு வாரங்களில் நிைலமை சீராகும். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். விவசாயிகள் பருவ காலத் திற்கு ஏற்ற பயிரை விளைவிப்பது நலம். இளநீர் அபிஷேகம் செய்து நடராஜரை வழிபடவும்.

    சிம்மம்

    எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும் வாரம். ராசி அதிபதி சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஆத்ம ஞானம் கிடைக்கும். உடலுக் கும், ஆன்மாவுக்கும் புத்துணர்வு தரும் பயிற்சி களில் ஆர்வம் ஏற்படும். மன சங்கடங்கள் அகலும். தடை பட்ட குல தெய்வ வேண்டுதல்களை நிறைவேற்று வீர்கள். பித்ருக்கள் வழிபாட்டில் ஆர்வம் மிகும். அரசு வழி ஆதாயம் உண்டு. குழந்தை பாக்கியம் தொடர் பான உங்களின் எண்ணம் ஈடேறும். பொறுப்புடன் வேலை செய்து அதிகாரிகளின் பாராட்டைப் பெறு வீர்கள். தடை பட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு இப்பொழுது கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். சனி, ராகு, கேதுக்களின் நிலைப்பாடு சுமாராக உள்ளதால் அதிக முதலீடு கொண்ட செயல் களைத் தவிர்ப்பது நல்லது. கிடைக்கும் பணத்தை வேறு வகையில் முதலீடு செய்ய வேண்டும். சிலரது காதல் பிரிவினையில் முடியும். வாழ்க்கைத் துணை யால் ஏற்பட்ட இடையூறுகள் குறையும். 29.12.2025 அன்று காலை 7.41 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு சளி, இருமல், காய்ச்சல், உடல் அசதி போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் உண்டாகும். திருவாதிரை அன்று நடராஜருக்கு விபூதி அபிஷேகம் செய்து வழிபடவும்.

    கன்னி

    புதிய தெளிவும் நம்பிக்கையும் பிறக்கும் வாரம். ராசி அதிபதி புதன் குருவுடன் பரிவர்த்தனை பெற்று உள்ளார். முயற்சிகளில் அதிக ஆர்வத்துடன் செயல்பட வேண்டும். அனைவரிடமும் பெருந் தன்மையாக நடந்து கொள்வது நல்லது. குடும்பத்தில் நிலவிய உட்பூசல் குறைந்து அமைதிப் பூங்காவாகும். தொழில், வேலையில் மாற்றம் ஏற்படலாம். வீடு மாற்றம், ஊர் மாற்றம் செய்ய வாய்ப்புள்ளது. வேலை, தொழில் சம்பந்தமாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம். சிலர் வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு செல்லலாம். சிலருக்கு வட்டி இல்லாத கைமாற்றுக் கடன் கிடைக்கும். ஆரோக்கிய குறைபாடுகள் வைத்தியத்தில் கட்டுப்படும். கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். உங்கள் திறமை யால் சாமர்த்தியத்தால் எதிரிகளை வெல்வீர்கள். 29.12.2025 அன்று காலை 7.41-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பித்து 31.12.2025 அன்று காலை 9.23-க்கு முடிவதால் சிலர் கை இருப்பை செலவழித்து விட்டு கடன் வாங்க நேரிடலாம். எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் மன சஞ்ச லத்தால் தாமதமாகும். நடராஜருக்கு பஞ்சகவ்ய அபிஷேகம் செய்து வழிபடவும்.

    துலாம்

    தடைகள் தகரும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தேவையற்ற பேச்சுக்கள், வாக்கு வாதங்கள் குறையும். பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் வருமானம் உயரும். வருமானம் தரக்கூடிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். கைவிட்டுப் போனது எல்லாம் கிடைக்கும். திருமணத் தடை அகலும். புத்திரப் பிராப்தம் கிடைக்கும். பெற்றோர்கள், பெரியோர்கள், முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க மாற்று முறை வைத்தியத்தை நாடுவீர்கள்.பொருளாதாரம், ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை திருப்தியான வாரம் என்பதால் நிம்மதியாக இருக்கலாம். மேலும் நன்மையை அதிகரிக்க குல தெய்வம், முன்னோர்களை வழிபடவும். 31.12.2025 அன்று காலை 9.23 மணி முதல் 2.1.2026 அன்று காலை 9.26 மணி வரை இருப்பதால் அன்றைய தினம் யாருக்கும் பணம் கடனாக தர, வாங்கக் கூடாது. நன்மையும் தீமையும் கலந்த வாரமாகவே இருக்கும் என்பதால் ஒரு செயலில் இறங்கும் முன்பு பலமுறை யோசிக்க வேண்டும். திருவாதிரையன்று நடராஜருக்கு கரும்புச் சாறு அபிஷேகம் செய்து வழிபடவும்.

    விருச்சிகம்

    விபரீத ராஜ யோகமான வாரம்.தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி குரு பகவான் 8,11ம் அதிபதி புதனுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார்.லாட்டரி, பங்குச் சந்தை லாபம், அதிர்ஷ்ட பணம், சொத்துக்கள் என எதிர்பாராத ராஜ யோகங்கள் ஏற்படலாம்.விசுவாசமாக உழைப்பவர்களுக்கு மலைபோல் வந்த பிரச்சினைகள் பனி போல் விலகும். பெண்களுக்கு கணவராலும், ஆண்களுக்கு மனைவியாலும் அதிர்ஷ்டமும், யோகமும் உண்டாகும். சுய ஜாதக ரீதியான தோஷங்கள் விலகி திருமணம் நடைபெறும்.உடன் பிறப்புகள், பங்காளிகள், சித்தப்பாவிடம் நிலவிய மனக்கசப்புகள் மறைந்து பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் சுமூகமாகும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் நன்மை ஏற்படலாம். சிலர் நண்பர் களுடன் இணைந்து புதிய கூட்டுத் தொழில் துவங்க லாம். அல்லது தொழிலை விரிவாக்கம் செய்யலாம். வீடு கட்டுதல், விரிவாக்கம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. 2.1.2026 அன்று காலை 9.26 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரைப் பற்றியும் யாரிடமும் குறை கூறாமல், தர்க்கம் செய்யா மல் அமைதி காப்பது நல்லது. திருவாதிரை அன்று நடராஜருக்கு புனுகு சாற்றி வழிபடவும்.

    தனுசு

    உழைப்பும், அதிர்ஷ்டமும் பலன் தரும் வாரம். ராசியில் உள்ள சூரியன், புதன், செவ்வாய், சுக்கி ரன் சேர்க்கைக்கு சனி, குரு பார்வை உள்ளது. தனுசு ராசியினர் பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழும் அமைப்பு உண்டாகும். செயற்கரிய செயல்களை செய்து புகழ், பாராட்டுகளை அடைவீர்கள். புத்திர தோஷம் விலகி குழந்தை பேறு கிடைக்கும். உங்கள் திறமைகள் வெளிப்படும். அலுவல கத்தில் மகிழ்ச்சியான போக்கு நீடிக்கும். வேலை மாற்ற சிந்தனையை ஒத்தி வைக்கவும். திருமண வயதில் இருப்பவர் களுக்கு கெட்டி மேளம் கொட்டப்படும். வீடு கட்ட, வாகனம் வாங்க உகந்த நேரம். சகோதர, சகோதரிகளிடம் நிலவிய போட்டி, பொறாமைகள் விலகும். பங்காளிகள் பிரச்சினை, கோர்ட்டு, கேஸ், வாய்தாக்கள் என அலைந்த நிலை மறையும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும். பூர்வீகம் தொடர் பான சர்ச்சைகள் முடிவிற்கு வரும். குல தெய்வ கோவிலுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். அண்டை அயலாருடன் சுமூகமான நிலை நீடிக்கும். உடன் பிறந்தே கொன்ற வியாதிக்கு முற்று புள்ளி வைப்பீர்கள். திருவாதிரை நட்சத்திர நாளில் விரதம் இருந்து நடராஜருக்கு பச்சைக் கற்பூரம் அபிஷேகம் செய்து வழிபடவும்.

    மகரம்

    நீண்ட கால கனவுகள், திட்டங்கள் நிறைவேறும் வாரம். ராசியை எந்த கிரகமும் பார்க்கவில்லை என்பதால் மனதில் நிம்மதி இருக்கும்.இதுவரை அனுபவித்த எண்ணிடலங்கா துயரம் தீரும். விரக்தியாக வாழ்ந்தவர்களுக்கு வாழ்க்கையில் பிடிப்பு, தைரியம் அதிகரிக்கும். முயற்சிகளுக்கும், திட்டமிடுதலுக்கும் குடும்ப உறவுகள் உதவியாக, ஆறுதலாக, பக்கபலமாக இருப்பார்கள். திருமணம், குழந்தை பேறு, உத்தியோகம், தொழில் என தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களும் மன நிறைவாக நடந்து முடியும். அடிமைத்தனத்துடன் நாடோடிபோல் வாழ்ந்தவர்களுக்கு நிரந்தமான தொழில், அதிர்ஷ்டம், முன்னேற்றம், புகழ் உண்டாகும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். அடிப்படை தேவைக்கு தடு மாறியவர்களுக்கு கூட தாராளமான பணப் புழக்கம் உண்டாகும். கலை ஆர்வம், அரசுப் பணி, அரசியல் வெற்றி தரும். இழந்த வேலை, மீண்டும் கிடைக்கும். தந்தையாலும், தந்தை வழி உறவுகள் மூலமும் முன்னேற்றத்திற்கான உதவிகள் கிடைக்கும். அடமானச் சொத்துக்கள், நகைகளை மீட்க வாய்ப்பு உள்ளது. திருவாதிரை நட்சத்திரம் அன்று விரதம் இருந்து சிவனுக்கு சந்தன அபிஷேகம் செய்து வழிபடவும்.

    கும்பம்

    வைராக்கியத்தாலும், விடா முயற்சியாலும் வெற்றி வாய்ப்பு உண்டாகும் வாரம். ராசியில் உள்ள ராகுவிற்கு தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி குருவின் பார்வை உள்ளது.ஞாபக சக்தி அதிகரிக்கும். தைரியமும் தெம்பும் குடிபுகும். சகல சவுபாக்கி யங்களையும் எல்லாவிதமான வளர்ச்சியையும் பெறக்கூடிய நிலை உள்ளது. நினைப்பது நடக்கும். கூட்டுத் தொழில், பங்குச் சந்தை ஆதாயம் உண்டு. சிலருக்கு வாடகை வருமானத்தை அதிகரிக்கும் சொத்துக்கள் சேரலாம். தடை பட்ட வாடகை வருமா னங்கள், சம்பள பாக்கிகள் கிடைக்கும். திருமணம், கல்வி, தொழில், உத்தியோகம், பிள்ளைப் பேறு போன்ற சுப செலவிற்காக உடன் பிறந்தவர்களுக்கு உதவ வேண்டிய சூழ்நிலை உள்ளது. பூர்வீக நிலப் பிரச்சினை தீரும். பூர்வீகத்தால் யோகம் உண்டாகும். காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்சினைகள் அறுவை சிகிச்சையில் சீராகும். ராசியில் ராகு ஏழில் கேது உள்ளதால் திருமண முயற்சியில் எடுத்தோம், கவிழ்த்தோம் என்றில்லாமல் நிதானமாக செயல் பட்டால் அதிக நன்மைய டையலாம். திருவாதிரை நட்சத்திர நாளில் விரதம் இருந்து நடராஜருக்கு தயிர் அபிஷேகம் செய்து வழிபடவும்.

    மீனம்

    நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய வாரம்.ராசியில் உள்ள சனிக்கு செவ்வாயின் நான்காம் பார்வை உள்ளது. பிறர் அறியா நுட்பங்களை அறிந்து தன்னிச்சையாக செயல்படும் தைரியம் உருவாகும்.பொருளாதார சுணக்கங்கள் விலகி அதிகப்படியான வருமானம் கிடைக்கும். சுகமான, சொகுசான ஆடம்பர பங்களா, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. இடப்பெயர்ச்சி செய்ய வாய்ப்புகள் உள்ளது.வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சக ஊழியர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். சிலர் வேலையில் இருந்து விடுபட்டு கடன் பெற்று புதிய சுய தொழில் துவங்கலாம். உடன் பிறந்த சகோதரர் அல்லது உங்களின் உதவியைப் பெற்ற வர்களே போட்டியாக, எதிரியாக மாறுவார்கள். பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் ஜாதக தசா புத்தி ரீதியான பரிகாரங்கள் செய்து கொண்டால் எல்லாச் பிரச்சினைகளும் விலகும். சில விசயங்கள் துவக்கத்தில் சாதகம் இல்லாமல் இருந்தாலும் முடிவில் வெற்றி உங்களுக்கே உண்டாகும். முரட்டு தைரியத்தை கைவிட்டு விவேகத்துடன் செயல்பட்டால் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருவாதிரை நட்சத்திர நாளில் விரதமிருந்து நடராஜருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    • திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம்.
    • குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு மார்கழி-13 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : அஷ்டமி காலை 7.46 மணி வரை பிறகு நவமி மறுநாள் விடியற்காலை 4.41 வரை பிறகு தசமி

    நட்சத்திரம் : ரேவதி மறுநாள் விடியற்காலை 4.04 மணி வரை பிறகு அசுவினி

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    காஞ்சிபுரம், சமயபுரம் உள்பட மாரியம்மன் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

    சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கும், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கும் திருமஞ்சன சேவை. திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.

    காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சியம்மன், சமயபுரம் ஸ்ரீமாரியம்மன், தஞ்சை ஸ்ரீ புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் பவனி. கானாடுகாத்தான் ஸ்ரீ சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நிம்மதி

    ரிஷபம்-ஓய்வு

    மிதுனம்-அனுகூலம்

    கடகம்-பயணம்

    சிம்மம்-ஜெயம்

    கன்னி-மாற்றம்

    துலாம்- திறமை

    விருச்சிகம்-உழைப்பு

    தனுசு- யோகம்

    மகரம்-சுகம்

    கும்பம்-சுபம்

    மீனம்-ஆதரவு

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. நட்பிற்காகச் செலவிடும் சூழ்நிலை உண்டு.

    ரிஷபம்

    யோகமான நாள். செலவிற்கேற்ற வரவு உண்டு. விட்டுப்போன வரன்கள் மீண்டும் வரலாம். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    மிதுனம்

    முயற்சிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவும் நாள். தொகை எதிர்பார்த்த இடத்தில் இருந்து வந்து சேரும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

    கடகம்

    தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தக்க விதத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். இடம்,பூமி சம்பந்தப்பட்ட வகையில் எடுத்த முயற்சி கைகூடும்.

    சிம்மம்

    விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. குறிப்பிட்ட நேரத்தில் பணிகளை முடிக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படலாம்.

    கன்னி

    பதவியில் உள்ளவர்களால் உதவி கிடைக்கும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்புச் செய்வர்.

    துலாம்

    அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும் நாள். உத்தியோகம் சம்பந்தமான முயற்சியில் அனுகூலமான நிலை காணப்படும். வியாபாரம் தொழிலில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

    விருச்சிகம்

    விருப்பங்கள் நிறைவேறும் நாள். வி.ஐ.பிக்கள் வீடு தேடி வருவர். கட்டிடம் கட்டும் முயற்சியில் இருந்த தடை அகலும். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும்.

    தனுசு

    குழப்பங்கள் அகலும் நாள். தாய் வழியில் ஆதரவு உண்டு. அந்நிய தேசத்திலிருந்து அனுகூலத் தகவல் வந்து சேரும். ஆலயத் திருப்பணிக்கு உதவ முன்வருவீர்கள்.

    மகரம்

    வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவீர்கள். வியாபார விரோதம் அகலும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    கும்பம்

    முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும் நாள். முக்கியப் புள்ளிகள் வழிகாட்டுவர். மதிப்பும், மரியாதையும் உயரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

    மீனம்

    நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். வீட்டுப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். விவேகத்துடன் செயல்படுவீர்கள். ஊர் மாற்றம், இடமாற்றம் செய்யும் எண்ணம் உருவாகும்.

    • அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டன.
    • வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை அடைக்கப்படுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்கியது. நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சபரிமலைக்கு வந்தனர்.

    ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக சன்னிதானத்துக்கு கொண்டுவரப்பட்ட தங்க அங்கியை கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு பெற்றுக்கொண்ட காட்சி.

     

    மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்டு, நேற்று மாலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. அதனை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

    இந்தநிலையில இன்று மண்டல பூஜை நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டன. நெய் அபிஷேகம் காலை 9 மணி வரை நடத்தப்பட்டது.

    பின்பு தங்க அங்கியுடன் ஜொலித்த ஐயப்பனுக்கு காலை 10.10 மணி முதல் 11.30 மணி வரையிலான நேரத்தில் கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மண்டல பூஜை நடைபெற உள்ளது. பின்னர் மதியம் ஒரு மணிக்கு வழக்கம்போல் கோவில் நடை அடைக்கப்படும்.

    அதன்பிறகு மாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடத்தப்படும். இன்று நாள் முழுவதும் ஐயப்பன் தங்க அங்கியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    மண்டல பூஜையை முன்னிட்டு நேற்று ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு மூலமாக 32 ஆயிரம் பேர் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இன்று ஆன்லைன் முன்பதிவு முறையில் 35 ஆயிரம் பேர், உடனடி முன்பதிவு முறையில் 2 ஆயிரம் பேர் என மொத்தம் 37 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுகின்றனர்.

    வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை அடைக்கப்படுகிறது. அத்துடன் 41 நாட்கள் நடைபெற்று வந்த மண்டல பூஜை நிறைவுக்கு வருகிறது.

    இந்த ஆண்டு மண்டல பூஜை காலத்தில் கடந்த 25-ந்தேதி வரை 30 லட்சத்து ஆயிரத்து 532 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளார்கள். கடந்த ஆண்டு(2024) மண்டல பூஜை சீசனில் நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து டிசம்பர் 25-ந்தேதி வரை 32 லட்சத்து 49 ஆயிரத்து 756 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவான பக்தர்களே சபரிமலைக்கு வந்துள்ளனர்.

    மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 2 நாட்களுக்கு பிறகு, அதாவது வருகிற 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி முன்னிலையில் மேல்சாந்தி கோவில் நடையை திறப்பார். மறுநாள்(31-ந்தேதி) மகர விளக்கு பூஜை வைபவம் தொடங்குகிறது.

    மரக ஜோதி தரிசனம் ஜனவரி 14-ந்தேதி நடைபெறுகிறது. அன்று மாலை ஜோதி வடிவில் ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சி தருவார். அதனை சன்னிதானம், பம்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் தரிசிப்பார்கள்.

    மண்டல பூஜை காலத்தை போன்றே மகரவிளக்கு பூஜை காலத்திலும் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால், அதற்கான முன்னேற்பாடு பணிகளை தேவசம்போர்டு செய்து வருகிறது.

    • குச்சனூர் ஸ்ரீ சனி பகவான் சிறப்பு திருமஞ்சனம்
    • உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார சிறப்பு திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு மார்கழி-12 (சனிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சப்தமி காலை 9.21 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம் : உத்திரட்டாதி மறுநாள் விடியற்காலை 5.18 மணி வரை பிறகு ரேவதி

    யோகம் : சித்த, மரணயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோவிலில் அலங்கார திருமஞ்சனம்

    குச்சனூர் ஸ்ரீ சனி பகவான் சிறப்பு திருமஞ்சனம். சிதம்பரம் சிவபெருமான் தங்க சூரிய பிரபையில் பவனி. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் இராப்பத்து உற்சவம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. பழனி ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. நயினார் கோவில் அன்னை சவுந்தரநாயகி திருவாடனை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார சிறப்பு திருமஞ்சனம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சனம். ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர், தேவகோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உவகை

    ரிஷபம்-திறமை

    மிதுனம்-போட்டி

    கடகம்-பாராட்டு

    சிம்மம்-பெருமை

    கன்னி-நன்மை

    துலாம்- இன்பம்

    விருச்சிகம்-பரிசு

    தனுசு- பரிவு

    மகரம்-முயற்சி

    கும்பம்-உயர்வு

    மீனம்-பாசம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். கட்டிடப் பணி தொடரும்.

    ரிஷபம்

    பிரிந்தவர்கள் வந்திணையும் நாள். வருமானம் திருப்தி தரும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.

    மிதுனம்

    கடன் சுமை குறையும் நாள். கடமையில் இருந்த தொய்வு அகலும். பிள்ளைகள் வழியில் விரயம் உண்டு. உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும்.

    கடகம்

    இனிய செய்திகள் இல்லம் தேடி வந்து சேரும் நாள். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். சொத்து, இடம் வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள்.

    சிம்மம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பிறருக்காக பணப்பொறுப்புகள் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. மனக்கசப்பு தரும் தகவல் வந்து சேரும்.

    கன்னி

    எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும் நாள். செல்லும் இடங்களில் செல்வாக்கு மேலோங்கும். சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும்.

    துலாம்

    பற்றாக்குறை அகலும் நாள். உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றத்தால் மனக்கலக்கம் ஏற்படலாம். வீடு, மனை வாங்கப் போட்ட திட்டங்கள் நிறைவேறும்.

    விருச்சிகம்

    பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வகையில் நல்ல முடிவு எடுப்பீர்கள்.

    தனுசு

    அயல்நாட்டிலிருந்து அனுகூலத் தகவல் வந்து சேரும் நாள். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும்.

    மகரம்

    எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். மனதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

    கும்பம்

    அலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும் நாள். வருங்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். வீட்டைச் சீரமைப்பதில் அக்கறை கூடும்.

    மீனம்

    மனக்குழப்பம் அகலும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைவதற்கான சந்தர்ப்பம் கைகூடிவரும். தொழிலை விரிவுபடுத்தலாமா என்று சிந்திப்பீர்கள்.

    ஆண்டாள் நாச்சியார் காட்டிய வழியில் இறைவனைத் துதிப்பது ஆத்ம பலத்தைத் தரும்.

    மார்கழி மாதம் என்பது தேவர்களின் அதிகாலை நேரமாகக் கருதப்படுகிறது. "மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்" என்று பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மாவே இதன் சிறப்பைக் கூறியுள்ளார். இந்த மாதத்தில் வழிபாடுகள் செய்வதால் கிடைக்கும் ஆன்மீகப் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

    மார்கழி மாத அதிகாலை நேரத்தில் ஓசோன் வாயு பூமியில் அதிக அளவில் இருக்கும். அந்த நேரத்தில் எழுந்து நீராடி, கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது உடல் ஆரோக்கியத்தைத் தருவதோடு, மனதை ஒருநிலைப்படுத்தி தன்னம்பிக்கையையும், ஒழுக்கத்தையும் வளர்க்கிறது.

    இங்கு, மார்கழி மாதத்தின் சிறப்பான பாவை நோன்பின பலன்கள் குறித்து பார்க்கலாம்.

    கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை பாடி நோன்பு நோற்பதால், நற்குணங்கள் கொண்ட கணவன் அமைவார் என்பதும், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் என்பதும் நம்பிக்கை. ஆண்டாள் நாச்சியார் காட்டிய வழியில் இறைவனைத் துதிப்பது ஆத்ம பலத்தைத் தரும்.

    இதேபோல், மார்கழி மாதத்தின் மிக முக்கியமான நிகழ்வு வைகுண்ட ஏகாதசி. அன்று விரதமிருந்து பெருமாளை தரிசனம் செய்து, சொர்க்கவாசல் வழியாகச் செல்வது இப்பிறவியில் செய்த பாவங்களை நீக்கி, பிறவா நிலை எனப்படும் முக்தியைத் தரும் என்று புராணங்கள் கூறுகின்றன.

    • ஒரு சமயம் மகாலட்சுமி தேவி, துர்வாச முனிவரிடம் மலர் மாலை ஒன்றை அளித்தார்.
    • கருவறையில் இறைவன் ஐராவதேஸ்வரர் லிங்க திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

    மயிலாடுதுறை மாவட்டம் பெருந்தோட்டம் என்ற இடத்தில் அமைந்துள்ளது ஐராவதேஸ்வரர் திருக்கோவில். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில், சோழர் காலத்தை சேர்ந்ததாக கருதப்படுகிறது. இத்தலத்தில் அருள்பாலிக்கும் இறைவன் ஐராவதேஸ்வரர் என்றும், இறைவி அதிதுல்ய குஜாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

    ஒரு சமயம் மகாலட்சுமி தேவி, துர்வாச முனிவரிடம் மலர் மாலை ஒன்றை அளித்தார். அதனை துர்வாச முனிவர் இந்திரனுக்கு பரிசளித்தார். இந்திரன், அந்த மாலையை தான் அமர்ந்திருந்த ஐராவதம் என்ற வெள்ளை யானையின் மீது வைத்தான். ஆனால் அந்த யானையோ மாலையை தரையில் வீசி காலால் மிதித்தது. இதைக் கண்ட துர்வாச முனிவருக்கு கோபம் தலைக்கேறியது. ஐராவதத்தைப் பார்த்து, ''நான் கொடுத்த மாலையை அவமதித்த உனக்கு தேவலோகத்தில் இருக்க தகுதியில்லை. பூலோகத்தில் காட்டு யானையாக சுற்றி திரிவாய்'' என சாபமிட்டார்.

    அதன்படி பூலோகம் வந்த யானை ஒவ்வொரு சிவாலயமாக சுற்றித் திரிந்தது. ஒரு முறை இத்தலத்திற்கு வந்தபோது, இங்கிருந்த விநாயகர் 'இறைவனை வழிபடக்கூடாது' என வாதிட்டார். அந்த விநாயகர் ஆலயத்தின் வடகிழக்கு திசையில் 'வாதாடும் கணபதி' என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். பின்பு சமாதானம் அடைந்த விநாயகர் யானையை வழிபட அனுமதித்தார். அதன்பிறகே யானைக்கு சாப விமோசனம் கிடைத்தது. ஐராவத யானை வழிபட்டதால் இத்தல இறைவன், 'ஐராவதேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

    இந்த ஆலயம் கிழக்கு நோக்கி காணப்படுகிறது. கோவில் முகப்பை தாண்டியதும் பலிபீடம், நந்தி காட்சி அளிக்கின்றன. அடுத்ததாக உள்ள மகாமண்டபத்தின் தென்திசையில் நால்வர் திருமேனி உள்ளது. வலதுபுறத்தில் அன்னை அதிதுல்ய குஜாம்பிகை நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். மேல் இருகரங்களில் கும்பத்தையும், தட்டையும் தாங்கி, கீழ் இருகரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரையுடன் நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி காட்சி அளிக்கிறார். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அன்னைக்கு விதவிதமாக அலங்காரம் செய்வர்.

    மகாமண்டபத்தை அடுத்து அர்த்தமண்டபம் காணப்படுகிறது. கருவறையில் இறைவன் ஐராவதேஸ்வரர் லிங்க திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். தேவக்கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, பிள்ளையார், பிரம்மா, துர்க்கா ஆகியோர் வீற்றிருக்கிறார்கள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் நான்கு வாரத்துக்கு துர்க்கைக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும் என்கிறார்கள்.

    திருச்சுற்றில் தல விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்கள் காட்சி அளிக்கின்றன. இத்தல இறைவனை வழிபட்டு வந்தால் கோபக் குணம் குறைந்து, மனதில் அமைதியும், நிதானமும் நிலவும் என்கிறார்கள்.

    மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு புதன் தலத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.

    • திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.
    • திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு மார்கழி-11 (வெள்ளிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சஷ்டி காலை 10.37 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம் : சதயம் காலை 6.34 வரை பிறகு பூரட்டாதி, மறுநாள் விடியற்காலை 6.06 மணி வரை பிறகு உத்திரட்டாதி

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    அம்மன் கோவில்களில் சிறப்பு பால் அபிஷேகம், திருத்தணி முருகன் கிளி வாகன சேவை

    சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்மன் தங்கப் பாவாடை தரிசனம். சிதம்பரம் ஸ்ரீ சிவபெருமான் சந்திரபிரபையில் பவனி. ஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் திருக்கோலமாய்க் காட்சி. ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் கஜேந்திர மோட்ச லீலை. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.

    கரூர் தான்தோன்றி ஸ்ரீ கல்யாண வேங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளிவாகன சேவை. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மேன்மை

    ரிஷபம்-சுகம்

    மிதுனம்-சுபம்

    கடகம்-ஆக்கம்

    சிம்மம்-ஆதரவு

    கன்னி-பரிவு

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-ஓய்வு

    தனுசு- புகழ்

    மகரம்-கடமை

    கும்பம்-உவகை

    மீனம்-வெற்றி

    ×