என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • சுமார் 10 நிமிடம் வரை நீடித்த இந்த நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
    • திருப்பள்ளி எழுச்சி சிறப்பு அபிஷேகம், உதயமார் தாண்ட பூஜை, பிரசாதம் வழங்குதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    தமிழ்நாட்டில் உள்ள பழமையான சிவ ஆலயங்களில் நெல்லை மாவட்டம் உவரி சுயம்பு லிங்கசுவாமி கோவிலும் ஒன்றாகும்.

    வங்க கடலோரம் சுவாமி சுயம்புவாக தோன்றிய இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் சூரிய ஒளியானது மூலவர் சுயம்பு லிங்கசுவாமி கோவில் மூலவர் மீது விழும் அதிசய நிகழ்வு நடைபெறும்.

    அதன்படி மார்கழி 2-ந் தேதியான இன்று அதிகாலையில் சூரிய உதயத்தை தொடர்ந்து கோவில் மூலவர் மீது காலை 6.35 மணிக்கு கோவிலில் உள்ள மூலவர் மீது சூரிய ஒளி விழுந்தது.

    சுமார் 10 நிமிடம் வரை நீடித்த இந்த நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். சிவபெருமானை சூரியன் வழிபடுவதாக நெகிழ்சியுடன் தெரிவித்தனர்

    முன்னதாக மார்கழி மாதத்தையொட்டி கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டது. தொடர்ந்து திருப்பள்ளி எழுச்சி சிறப்பு அபிஷேகம், உதயமார் தாண்ட பூஜை, பிரசாதம் வழங்குதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கடல் மண்ணை பெட்டியில் சுமந்து அதை கடற்கரையில் கொட்டி நேர்த்தி கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்.

    • மார்கழியில் விஷ்ணு வழிபாடு மட்டுமின்றி, சிவன் வழிபாடும் சிறப்பானதாகும்.
    • கொடிய விஷத்தை சிவபெருமான் உண்டு, உலக உயிர்களை காத்ததும் மார்கழி மாதத்தில்தான்.

    'மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் கிருஷ்ணர் அருளியுள்ளார். அதற்கேற்றால்போல் பல சிறப்புகளை மார்கழி மாதம் பெற்றுள்ளது. மார்கழி மாதம் வந்தாலே அதிகாலையில் எழுந்து நீராடி, இறைவனை வழிபடுவது என்பது வழக்கமான ஒன்றாகும்.

    மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும். தேவலோகத்தில் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை பகல் பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை இரவாகவும் கருதப்படுகிறது. பகல் பொழுதை உத்தராயணம் என்றும், இரவு பொழுதை என்றும் அதன்படி தட்சிணாயனம் அழைப்பார்கள். அதிகாலையான, பிரம்ம முகூர்த்தமாக தேவர்களுக்கு மார்கழி மாதம் உள்ளது. இதனால் மார்கழி மாதத்தில் செய்யப்படும் வழிபாடுகளுக்கு தனிச் சிறப்புகளும், பலன்களும் உண்டு. எனவேதான் மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து கோவிலுக்கு செல்ல வேண்டும் என்கிறார்கள்.

    ஜோதிட சாஸ்திரப்படி, சூரிய பகவான் தனுசு ராசியில் பிரவேசிக்கும் மாதமாக மார்கழி மாதம் உள்ளது. எனவே மார்கழி மாதம், 'தனுர் மாதம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தெய்வ வழிபாட்டுக்குரிய சிறப்புமிக்க மாதமான மார்கழியில் விஷ்ணு வழிபாடு மட்டுமின்றி, சிவன் வழிபாடும் சிறப்பானதாகும். மார்கழி மாதம் அதிகாலையில் வைணவ தலங்கள் திறக்கப்பட்டு, திருப்பாவை பாசுரங்கள் பாடி திருப்பள்ளியெழுச்சி நடைபெறும். அதுபோல சிவன் கோவில்களிலும் மாணிக்க வாசகர் அருளிய திருவெம்பாவை பாடப்படுகிறது.

    மார்கழி மாதம் விடியற்காலையில் கன்னி பெண்களை துயில் எழுப்பி, ஆற்றில் நீராடி இறைவனை போற்றி வழிபடுவதை ஆண்டாள் திருப்பாவையில் விவரித்துள்ளார். அதன்படி, மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து, குளித்துவிட்டு பாவை நோன்பு இருந்து இறைவனை வழிபட்டால் மனதிற்கு பிடித்த கணவன் கிடைப்பார் என்பது நம்பிக்கை. திருப்பாவை போன்று சிவ பக்தைகள், நோன்பு நோற்பதற்காக தோழிகளை எழுப்புவதாக அமைந்ததே, திருவெம்பாவை. சிவன் அடியாளர்களே கணவனாக வேண்டும் என்றும், பின்பு அவரோடு சேர்ந்து சிவனை தொழ வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

    கோகுலத்தில் இந்திரனால் பெருமழை உருவாக்கப்பட்டு, மக்கள் அனைவரும் துன்பப்பட்டபோது, கிருஷ்ணர் கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றினார். இந்நிகழ்வு நடந்தது மார்கழி மாதத்தில் தான். திருப்பாற்கடலை கடைந்தபோது, அதில் இருந்து ஆலகால விஷம் வெளிவந்தது. அந்த கொடிய விஷத்தை சிவபெருமான் உண்டு, உலக உயிர்களை காத்ததும் மார்கழி மாதத்தில்தான்.

    மகாவிஷ்ணுவுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி, இந்த ஆண்டு மார்கழி மாதம் 15-ந் தேதி (30-12-2025) அன்று செவ்வாய்க்கிழமை வருகிறது. அன்றைய தினம், ஆண்டு முழுவதும் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சொர்க்கவாசல் திறக்கப்படும். அந்த சொர்க்கவாசல் வழியாக நுழைந்துவந்தால், வாழ்வில் உள்ள சிக்கல்கள் நீங்கும், செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

    சிவாலயங்களில் நடைபெறும் முக்கிய உற்சவங்களில் ஒன்றான ஆருத்ரா தரிசனம் மார்கழி மாதத்தில் நடத்தப்படும். அதன்படி மார்கழி மாதம் 19-ந் தேதி (3-1-2025) அன்று சனிக்கிழமை ஆருத்ரா தரிசனம் வருகிறது. இது சிதம்பரம் நடராஜர் கோவிலில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    அனுமன் அவதரித்த நாளாக மார்கழி மாதம் அமாவாசை நாள் கருதப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு மார்கழி மாதம் 4-ந் தேதி (19-12-2025) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினமும் ஆஞ்சநேயருக்கு வடைமாலை, வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால் வாழ்வில் வெற்றிகள் குவியும்.

    மார்கழி மாதம் 10-ந் தேதி (25-12-2025) வியாழக்கிழமை அன்று பிள்ளையார் நோன்பு வருகிறது. திருக்கார்த்திகையில் இருந்து 21 நாட்கள் விரதம் இருந்து விநாயகரை வழிபட வேண்டும். இந்த விரதம் இருந்து வழிபட்டால் இனிமையான வாழ்வு அமையும்.

    மார்கழி மாதம் 30 நாட்களும் பெண்கள் அதிகாலையில் எழுந்து, நீராடிவிட்டு வீட்டின் முன்பு கோலமிட்டு அதன் மீது அழகான மலர்களால் அழகுபடுத்துவார்கள். கோலத்தின் மீது பரங்கிப்பூக்களை வைத்து அழகுபடுத்துவது வழக்கம். இதன்மூலம் மகாலட்சுமியே வீட்டிற்குள் குடியேறுவாள் என்பது ஐதீகம்.

    இத்தகைய சிறப்புகள் நிறைந்த மார்கழி மாதத்தில், அதிகாலையில் வீட்டின் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபடுவதுடன், ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கலாம்.

    • மார்கழி மாதம் மூல நட்சத்திரமும், அமாவாசையும் இணையும் நாளில் அஞ்சனை மைந்தனாக அனுமன் அவதரித்தார்.
    • ஆஞ்சநேயரின் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி இருப்பதாக ஐதீகம்.

    ராம நாமம் ஒலிக்கும் இடமெல்லாம் அனுமன் நிச்சயம் இருப்பார் என்பது ஐதீகம். ராமாயணத்தில் ராமருக்கு அடுத்தபடியாக, பக்தர்களால் கொண்டாடப்படும் கடவுள், அனுமன். இவர் அஞ்சனை மைந்தன், வாயு புத்திரன், ராம பக்தன், ராம தூதன், சிரஞ்சீவி, மாருதி, ஆஞ்சநேயர் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். இவர் சிவபெருமானின் ருத்ர அம்சமாக கருதப்படுகிறார். ராம நாமத்தை சொல்பவர்களுக்கு உடனடியாக வந்து அருள்புரியும் அனுமனை வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சியும், புண்ணியமும் வந்துசேரும்.

    மார்கழி மாதம் அமாவாசையுடன் வரும் மூலம் நட்சத்திரத்தில் அனுமன் அவதரித்ததாக கூறப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி மார்கழி மாதம் 4-ந் தேதி (19-12-2025) வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பக்தர்கள் பலரும் விரதம் இருந்து ஆஞ்சநேயரை வழிபடுவார்கள். சில வட மாநிலங்களில் சித்திரை மாதத்தில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுவதும் உண்டு.

    ராமாயணத்தில் ராவணனை அழிப்பதற்காக மகாவிஷ்ணு, ராமராக அவதரித்தார். அவருக்கு உதவுவதற்காக தேவர்கள் பலரும் பல சக்திகளை கொடுத்து உதவினர். அதே சமயம், கிஷ்கிந்தை வனப் பகுதியில் கேசரி என்ற வானர அரசனும், அவரது மனைவியான அஞ்சனை தேவியும் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால், குழந்தை வரம் வேண்டி சிவபெருமானை நோக்கி தவம் இருந்தனர். அவ்வேளையில் ராமருக்கு உதவுவதற்காக சிவபெருமான், தன்னுடைய சக்தியை வாயு பகவானிடம் கொடுத்து ஒரு பெண்ணிடம் சேர்க்கும்படி கூறினார். வாயு பகவான் ஈசனின் சக்தியை அஞ்சனை தேவியிடன் சேர்த்தார். இதன்மூலம் மார்கழி மாதம் மூல நட்சத்திரமும், அமாவாசையும் இணையும் நாளில் அஞ்சனை மைந்தனாக அனுமன் அவதரித்தார்.

    அனுமன் ஜெயந்தி அன்று, அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு அனுமன் படத்துக்கு சிவப்பு நிற மலர்கள் சூட்டுங்கள். ஆஞ்சநேயருக்கு விருப்பமான உணவுகளை படைத்து, நெய் விளக்கேற்றி வழிபடுங்கள். அனுமனுக்குரிய பாடல்கள், ராமாயணத்தின் சுந்தர காண்டம் போன்றவற்றை படித்து வழிபடலாம். அதோடு வாழைப்பழம், வெற்றிலை, வெண்ணெய், செந்தூரம் போன்றவற்றை படைக்கலாம்.

    வனவாசம் சென்ற ராமன் மனைவியை ராவணன் கவர்ந்து சென்றான். இதையடுத்து சீதையை மீட்கும் முயற்சியில் இருந்த ராமனுக்கு சிறந்த சேவகனாக இருந்தவர் அனுமன். ராமனுக்காக சீதையிடம் தூது சென்று, அவர் கொடுத்த கணையாளியை கொடுத்து சீதையின் மரணத்தை தடுத்தார். மேலும், சீதா தேவி கொடுத்து அனுப்பிய சூடாமணியை ராமரிடம் கொடுத்து, இருவரும் சேருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர், அனுமன். இதனால் அனுமனை வழிபட்டால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர், கணவன் - மனைவி ஒற்றுமை பலப்படும், ஆனந்த வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.

    ஆஞ்சநேயரின் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி இருப்பதாக ஐதீகம். எனவே, அவரது வாலில் பொட்டு வைத்து வழிபடலாம். இவ்வாறு வழிபடுபவர்களுக்கு நவக்கிரகங்களின் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

    சிவபெருமான், ராமருக்கு உதவி செய்வதற்காக ஆஞ்சநேயராக அவதரித்தார். இதனால் ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும், பெருமாளையும் வழிபட்ட பலன் கிடைக்கும். ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று, ஆஞ்சநேயரை மனதார வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும். குடும்பத்தில் துன்பங்கள் விலகும், சகல மங்கலங்களும் வந்துசேரும்.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். வருமானம் வந்த மறுநிமிடமே செலவாகலாம். பணியாளர்களின் ஒத்துழைப்புக் கொஞ்சம் குறையலாம்.

    ரிஷபம்

    வீடுமாற்றங்கள் பற்றிச் சிந்திக்கும் நாள். வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வர்.

    மிதுனம்

    பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

    கடகம்

    வரவைக் காட்டிலும் செலவு கூடும். அன்றாடப் பணிகளில் இன்று மாற்றங்கள் ஏற்படலாம். உத்தியோகப் பிரச்சனை நீடிக்கும்.

    சிம்மம்

    ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் அதிகாலையிலேயே வந்து சேரும் நாள். தொலைதூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டங்கள் நிறைவேறும்.

    கன்னி

    தொட்ட காரியம் துளிர்விடும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் தோள்கொடுத்து உதவுவர். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் கூடும். உத்தியோக முயற்சி கைகூடும்.

    துலாம்

    உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தனவரவு திருப்தி தரும். நேற்றைய பிரச்சனையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும்.

    விருச்சிகம்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மற்றவர்களை ஈர்க்கும்.

    தனுசு

    எதிர்பார்த்த லாபம் எளிதில் கிடைக்கும் நாள். குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. சொத்துப்பிரச்சனை சுமூகமாக முடியும்.

    மகரம்

    தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள்.

    கும்பம்

    வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை நெறிப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் ஏற்பட்ட வீண்பழிகள் மாறும்.

    மீனம்

    பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். ஒருவழியில் வந்த வரவு மற்றொரு வழியில் செலவாகலாம். வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும்.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம்.
    • ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு மார்கழி-2 (புதன்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : திரயோதசி பின்னிரவு 3.51 மணி வரை பிறகு சதுர்த்தசி

    நட்சத்திரம் : விசாகம் இரவு 7 மணி வரை பிறகு அனுஷம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி

    இன்று பிரதோஷம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீமுருகப் பெருமான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் பெருமாள் புறப்பாடு.

    விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலையில் அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் திருமஞ்சன சேவை. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை, ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலையில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆதரவு

    ரிஷபம்-அன்பு

    மிதுனம்-இன்பம்

    கடகம்-பக்தி

    சிம்மம்-உதவி

    கன்னி-நிறைவு

    துலாம்- நம்பிக்கை

    விருச்சிகம்-பாராட்டு

    தனுசு- சாதனை

    மகரம்-ஆதாயம்

    கும்பம்-உவகை

    மீனம்-சுகம்

    • மார்கழி மாத பிறப்பையொட்டி திருப்பதியில் திருப்பாவை பாடப்படுகிறது.
    • வெல்லம் தோசை, சுண்டல், சீரகம் மற்றும் பொங்கல் போன்ற சிறப்பு பிரசாதங்கள் படைக்கப்படுகிறது.

    மார்கழி மாத பிறப்பையொட்டி திருப்பதியில் இன்று முதல் திருப்பாவை பாடப்படுகிறது. இதனையொட்டி இன்று முதல் மூலவர் ஏழுமலையானுக்கு வில்வ இலைகளால் சஹஸ்ர நாமார்ச்சனை செய்யப்படுகிறது.

    ஒவ்வொரு நாளும் ஏழுமலையானுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கிளி அலங்காரம் செய்யப்படுகிறது. வெல்லம் தோசை, சுண்டல், சீரகம் மற்றும் பொங்கல் போன்ற சிறப்பு பிரசாதங்கள் படைக்கப்படுகிறது.

    நாளை (புதன்கிழமை) முதல் ஒரு மாதத்திற்கு சுப்ரபாத சேவை ரத்து செய்யப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 70.251 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 26,862 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.4.66 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • பகல்பத்து திருநாளில் ஒவ்வொரு நாளும் பார்த்தசாரதி பெருமாள் வெவ்வேறு அலங்காரத்துடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    • 31-ந்தேதியிலிருந்து ஜனவரி 7-ந்தேதி வரை 8 நாட்களுக்கு தினசரி மாலை 4.15 மணிக்கு சொர்க்கவாசல் தரிசனம் நடக்கிறது.

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பழமை வாய்ந்தது. பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் பாடல் பெற்ற தலமாகும். மூலவர் வேங்கடகிருஷ்ணன் சாமி நிற்க, ஒரு புறம் ருக்மணி தாயார், மறுபுறம் சாத்யகியும் (இளைய தனயன்), தாயாரின் பக்கம் பலராமரும், சாத்யகியின் பக்கம் மகன் பிருத்யும்னனும், பேரன் அநிருத்தன் ஆகியோருடன் அருள்பாலிக்கிறார்.

    இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) பகல் 2 மணிக்கு பகல்பத்து முதல் திருநாள் வேங்கடகிருஷ்ணன் திருக்கோலத்துடன் தொடங்குகிறது.

    பகல்பத்து திருநாளில் ஒவ்வொரு நாளும் பார்த்தசாரதி பெருமாள் வெவ்வேறு அலங்காரத்துடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முக்கிய திருநாளான சொர்க்கவாசல் திறப்பு வரும் 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 2.30 மணியிலிருந்து 4 மணி வரை மூலவர் தரிசனமும், காலை 4.15 மணிக்கு உள்பிரகார புறப்பாடும், காலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பும் நடக்கிறது.

    இதையடுத்து வேதம் தமிழ்செய்த மாறன் சடகோபனுக்கு மரியாதை செய்யப்படுகிறது. காலை 5.30 மணியிலிருந்து அன்றிரவு 10.30 மணி வரை மூலவர் பொது தரிசனம் நடக்கிறது. இரவு 10 மணிக்கு உற்சவர் திருமஞ்சனம், இரவு 11.30 மணிக்கு பார்த்தசாரதி சாமி உற்சவர் நம்மாழ்வாருடன் பெரிய வீதி புறப்பாடு நடக்கிறது. 31-ந்தேதியிலிருந்து ஜனவரி 7-ந்தேதி வரை 8 நாட்களுக்கு தினசரி மாலை 4.15 மணிக்கு சொர்க்கவாசல் தரிசனம் நடக்கிறது.

    ஜனவரி 9-ந்தேதி வரை நடக்கும் இராப்பத்து உற்சவத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் பார்த்தசாரதி ஒவ்வொரு திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சொர்க்கவாசல் திறப்பையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    • ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளுக்கான ஒதுக்கீடு 24-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
    • திருமலை மற்றும் திருப்பதிக்கான தங்குமிட ஒதுக்கீடு மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.

    திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய மார்ச் மாதத்துக்கான தரிசன டிக்கெட் 18-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். பக்தர்கள் இந்தச் சேவைகளுக்கான மின்னணு குலுக்கல் முறைக்கு (இ-டிப்) 20-ந்தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

    ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளுக்கான ஒதுக்கீடு 24-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். அதே சமயம் திருமலை மற்றும் திருப்பதிக்கான தங்குமிட ஒதுக்கீடு மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். பக்தர்கள் அர்ஜித சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
    • திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு.

    16-ந் தேதி (செவ்வாய்)

    * கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை விழா தொடக்கம்.

    * சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

    * சமநோக்கு நாள்.

    17-ந் தேதி (புதன்)

    * பிரதோஷம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    18-ந் தேதி (வியாழன்)

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம்.

    * பெருஞ்சேரி வாகீசுவரர் புறப்பாடு.

    19-ந் தேதி (வெள்ளி)

    * அமாவாசை.

    * அனுமன் ஜெயந்தி.

    * திருவரங்கம் நம்பெருமாள் திருநெடுந்தாண்டவம்.

    * நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றியருளல்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

    * சமநோக்கு நாள்.

    20-ந் தேதி (சனி)

    * விஷ்ணு ஆலயங்களில் திருப்பல்லாண்டு உற்சவம் ஆரம்பம்.

    * ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் திருமொழி திருநாள் தொடக்கம்.

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    21-ந் தேதி (ஞாயிறு)

    * ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் ராஜாங்க சேவை.

    * திருவரங்கம் நம்பெருமாள், காஞ்சிபுரம் வரத ராஜப் பெருமாள், மதுரை கூடலழகர் பெருமாள் தலங்களில் பகற்பத்து உற்சவம்.

    * திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    22-ந் தேதி (திங்கள்)

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் காளிங்க நர்த்தன காட்சி.

    * திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், அரியக்குடி சீனிவாசப் பெருமாள், வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் தலங்களில் திருமொழி திருநாள் தொடக்கம்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * மேல்நோக்கு நாள்.

    • இத்தல இறைவன் 'உலகேஸ்வரர், ஒலகேஸ்வரர், உலக விடங்கீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.
    • இத்தலத்தில் சஞ்சீவி மலையின் ஆற்றலும், பயனும் நிறைந்துள்ளதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

    ராமாயணத்தோடு தொடர்புடைய தலமாகவும், அனுமனால் வழிபடப்பட்ட தலமாகவும், பல வரலாற்று சிறப்புகளைக் கொண்ட தலமாகவும் உள்ளது, உலக விடங்கீஸ்வரர் திருக்கோவில். ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து வெள்ளித் திருப்பூர் செல்லும் சாலையில் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஒலகடம் என்ற ஊர். இங்கு உலக விடங்கீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    சங்க இலக்கியத்தில் 'உலகடம்' என்று இடம்பெற்றுள்ள இந்த ஊர், கி.பி. 12-ம் நூற்றாண்டில் கொங்கு சோழர்களின் ஆட்சியில் 'உலகவிடங்கம்' என்று அழைக்கப்பட்டது. தற்போது இந்த ஊர் 'ஒலகடம்' எனப்படுகிறது. காவிரிக்கரையின் வட பகுதியில் அமைந்திருப்பதால் 'வடகரை உலக விடங்கம்' என்ற பெயரும் இதற்கு உண்டு.

    இத்தல இறைவன் 'உலகேஸ்வரர், ஒலகேஸ்வரர், உலக விடங்கீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். அம்பாளின் திருநாமம் 'உலக நாயகி' என்பதாகும். 'விடங்கர்' என்றால் 'உளியால் செதுக்கப்படாதவர்' என்று பொருள். இங்கு உள்ள ஈசன் சுயம்புவாக எழுந்தருளி இருக்கிறார். உலக விடங்கர் உலக மக்க ளைக் காக்கும் பெருமைக்குரிய உலக ஈஸ்வரராக இங்கு திகழ்கிறார்.

    லட்சுமணனின் உயிரைக் காப்பதற்காக இமயமலையில் இருந்து மூலிகைச் செடிகள் நிரம்பிய சஞ்சீவி மலையை எடுத்துக் கொண்டு இந்த வழியாக பறந்து சென்றார், அனுமன். இந்த ஆலய இறைவன் இருக்கும் இடத்திற்கு மேலே பறந்தபோது, அனுமனின் கை அசைவற்று நின்று போனது.

    இதையடுத்து, கீழே சிவபெருமானின் திருத்தலம் இருப்பதை உணர்ந்து கொண்ட அனுமன், கீழே இறங்கி, மூன்று முறை இத்தல இறைவனின் இருப்பிடத்தை வலம் வந்து வழிபட்டு அதன் பிறகு புறப்பட்டுச் சென்றார் என்கிறது தல வரலாறு. இதனால் இத்தலத்தில் சஞ்சீவி மலையின் ஆற்றலும், பயனும் நிறைந்துள்ளதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு மார்கழி-1 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : துவாதசி நள்ளிரவு 1.38 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம் : சுவாதி மாலை 4.28 மணி வரை பிறகு விசாகம்

    யோகம் : சித்த, மரணயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்

    இன்று சர்வாலயங்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை விழா தொடக்கம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்.

    திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலையில் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உயர்வு

    ரிஷபம்-ஊக்கம்

    மிதுனம்-ஆர்வம்

    கடகம்-பண்பு

    சிம்மம்-பணிவு

    கன்னி-பாசம்

    துலாம்- உதவி

    விருச்சிகம்-செலவு

    தனுசு- உண்மை

    மகரம்-வரவு

    கும்பம்-வெற்றி

    மீனம்-பக்தி

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    உடன்பிறப்புகள் உறுதுணையாக இருக்கும் நாள். உள்ளம் மகிழும் செய்தி அதிகாலையிலேயே வந்து சேரும். பற்றாக்குறை தீர்ந்து பணவரவு கூடும். தொழில் வளர்ச்சி உண்டு.

    ரிஷபம்

    மனக்குழப்பம் அகலும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    மிதுனம்

    திடீர்ப் பயணத்தால் தித்திப்பான செய்தி வந்து சேரும் நாள். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு.

    கடகம்

    சேமிப்பு கரைகின்றதே என்று சிந்திப்பீர்கள். மற்றவர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் உங்களிடமே திரும்பி வரலாம். விரயங்கள் அதிகரிக்கும் நாள்.

    சிம்மம்

    வரவு திருப்தி தரும் நாள். செயல்திறன் மிக்கவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். பூமிவாங்கும் எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    கன்னி

    முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். முன்னேற்றப்பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வழக்குகள் சாதகமாகும்.

    துலாம்

    வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் நாள். வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். தொழில் வளர்ச்சிக்குப் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    விருச்சிகம்

    யோகமான நாள். பிரபலங்களின் சந்திப்பு கிட்டும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பூர்வீக சொத்துத்தகராறுகள் அகலும்.

    தனுசு

    இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும் நாள். அடுத்தவர் நலன்கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.

    மகரம்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வியாபார விரோதம் அகலும். கடன்பிரச்சனைகளைச் சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும்.

    கும்பம்

    சந்தோஷ வாய்ப்புகளைச் சந்திக்கும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். இடம், பூமியால் லாபம் உண்டு.

    மீனம்

    வரவை விடச் செலவு கூடும். உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்டைத்த பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழிலில் குறுக்கீடுகள் அதிகரிக்கும்.

    ×